மேலும் அறிய

சரவண பவன் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் மோகன்லால் ?

சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை மோகன்லாலை வைத்து இயக்குநர் த செ ஞானவேல் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றில் மோகன்லால்

ஜெய் பீம் , வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் த செ ஞானவேல் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ஹோட்டல் சரவண பவன் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை ' தோசா கிங்' என்கிற  படமாக எடுக்க பல  ஆண்டுகளாக முயற்சித்து வந்தார் ஞானவேல். இதில் பல்வேறு சவால்கள் இருந்ததால் இந்த படத்திற்கான வேலைகள் தள்ளிப்போய் கொண்டிருந்தன. தற்போது சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் 7 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிச்சை ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறு

தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் வெங்காய விவாசாயிக்கு மகனாக பிறந்தவர் பிச்சை  ராஜகோபால்.  1973 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து ஒரு சிறிய மளிகை கடையைத் தொடங்கினார். நெருப்பு சம்பந்தபட்ட ஒரு தொழிலை தொடங்கும்படி ஜோசியர் ஒருவர் வழங்கிய அறிவுரையின்படி   1981 ஆம் ஆண்டு  சரவண பவன் என்கிற சைவ உணவகத்தைத்  தொடங்கினார். குறைவான விலையில் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதை தனது கொள்கையை கடைசிவரை கடைபிடித்தார். மேலும் தனது உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் , மருத்துவ காப்பீடு , வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துகொடுத்து மக்களால் செல்லமாக 'அண்ணாச்சி ' என அழைக்கப்பட்டார். ஒரு சிறு ஹோட்டலில் தொடங்கி  2019 ஆம் ஆண்டுக்குள் 22 நாடுகளில் 111 கடைகளை உருவாக்கினார். இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ 3000 கோடி.

ஜீவஜோதி வழக்கு 

ஒருபக்கம் வியக்கதகுந்த மனிதராக கருதப்படும் ராஜகோபாலின் வாழ்க்கைக்கு மற்றொரு இருண்ட பக்கமும் இருக்கிறது. ஜோதிடத்தின் மேல் தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்தவர் ராஜகோபால் தனது தொழில் ரீதியான எல்லா முடிவுகளையும் ஜோதிடத்தின் அடிப்படையில் எடுக்கக் கூடியவர். அதே ஜோதிடத்திற்கு கட்டுப்பட்டு  தனது உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொண்டால் உலகத்தின் மிகப்பெரிய செல்வந்தராகிவிடலாம் என நம்பினார். ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவருடம் திருமணம் ஆனவர் என்றபோது தொடர்ச்சியாக ஜீவஜோதிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார்.  2001 ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்ததற்காக ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். தண்டனையை குறைக்க ராஜகோலா மனுதாக்கல் செய்தபோது அவருக்கு ஆயுள் தண்டனையை தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். சிறை செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு ராஜகோபால் உயிரிழந்தார்.

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget