Bison: பைசன் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.. இத்தனை கோடிக்கு விற்பனையா!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாரிசன் படத்தின் திரையரங்க ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனையானது.

இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை படத்தின் வெற்றியை தொடர்ந்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், கலையரசன் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் படங்களை பொறுத்தவரை சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டுவது போன்று இருக்கும்.
தீபாவளிக்கு சீறி பாயும் பைசன்
அதேபோன்றதொரு கதையாகத்தான் இதனை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். சமீபத்தில் வெளியான தீ கொளுத்தி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காதல் தோல்வியில் துவண்டு கிடக்கும் இளைஞனின் அழுகுரலை பதிவு செய்தது போன்ற இப்பாடல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், பைசன் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இப்படத்தின் தமிழக உரிமையை ரூ. 15 கோடிக்கு முன்னணி விநியோகஸ்தரான 5 ஸ்டார் செந்தில் வாங்கியுள்ளார்.
இளம் தலைமுறை ஹீரோக்கள் மோதல்
படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம். நிச்சயமாக தீபாவளி பந்தயத்தில் இப்படம் வெற்றிகொடி நாட்டும் என்பதால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்தாண்டு தீபாவளி தினத்தை காட்டிலும் இந்த தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல் என்றே சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இளம் தலைமுறையினர் ஹீரோக்கள் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகிறது. இந்த தீபாவளி ரேஸில் டாப் ஸ்டார் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே, ட்யூட், ஹரிஸ் கல்யாண் நடித்திருக்கும் டீசல் படங்கள் வெளியாவதை உறுதி செய்துள்ளன. ஆனால், சூர்யா நடித்திருக்கும் கருப்பு படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓடிடி ரைட்ஸ் விற்பனை ஆவதில் தாமதம் என்பதால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.





















