கணேஷ் சதுர்த்தி முக்கியத்துவம்
விநாயகப் பெருமான் அனைத்திற்கும் முழு முதற்கடவுளாக திகழ்கிறார். அவரை கணபதி, கணேசன், பிள்ளையார், கஜானனன், லம்போதரன் போன்ற பல பெயர்களால் பக்தர்கள் அவரை வணங்குவார்கள்.
இந்து மார்க்கத்தில் எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் விநாயகப் பெருமானை வணங்கி, பூஜை செய்வது ஐதீகமாக உள்ளது. இதன் காரணமாகவே அவரை முழு முதற்கடவுள் என்று போற்றுகின்றனர்.
கணேஷ் ஸ்தாபனமும் பூஜை முகூர்த்தமும்
நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா வட இந்தியாவில் 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் இந்த நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
கணேஷ் சதுர்த்தியில் சந்திர தரிசனம்
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான் சிலைகள் வீதிகள் தோறும் வைக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யப்படும். வீடுகள் தோறும் தரிசனத்திற்காக பவனி எடுத்துச் செல்லப்படும்.
சிம்ஹ: பிரசேனமவதீத் சிம்ஹோ ஜாம்பவதா ஹத:
சுகுமாரக மாரோ தீஸ்தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:
மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கணேஷ் உத்சவம் (லால்பாக் சா ராஜா)
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரபலமானது. இதன் பாரம்பரியம் மராத்திய அரசில் தொடங்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது. 17ஆம் நூற்றாண்டில், சத்ரபதி சிவாஜி மக்களிடையே தேசிய உணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக இதை அறிமுகப்படுத்தியதாக புராணங்களில் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களை ஒன்றிணைப்பதற்காக விநாயகர் சதுர்த்தியை மேலும் பிரபலப்படுத்தினார். மும்பையில் கணேஷ் பகவானை "லால்பாக் சா ராஜா" என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.













