சினிமாவிற்கு வந்திருந்தால் வைகோ தான் சூப்பர் ஸ்டார்.. ரஜினிகாந்த் மிரண்டு போனார்.. பிரபல நடிகர் ஓபன் டாக்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நடிகர் தம்பி ராமையா பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தம்பி ராமையா. இவர் நடிப்பதை தாண்டி இயக்குநர், ஸ்க்ரிப்ட் ரைட்டர் போன்ற பன்முகத்திறமை கொண்டவராகவும் விளங்குகிறார். சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த நபர்களை பாராட்ட தயங்கியதும் இல்லை. அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளரை தம்பி ராமையா பாராட்டி பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வைகோ தான் சூப்பர் ஸ்டார்
நடிகர் தம்பி ராமையா வைகோ குறித்து பேசியதாவது, வைகோ மட்டும் சினிமாவில் கால் பதித்திருந்தால் அவர்தான் சூப்பஸ் ஸ்டாராக இருந்திருப்பார். அவரது கம்பீரத்திற்கும், கண் புருவம், குரல் மற்றும் மூக்கின் அழகிற்கு அவரை தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் ஆகிவிட முடியாது. அவர் சினிமாவிற்கு வந்திருந்தால் அமிதாப்பச்சனை ஓரங்கட்டியிருப்பார். ஆனால், வைகே தேர்ந்தெடுத்திருக்கும் துறை அரசியல். ஒருமுறை அவர் மேடையில் பேசிய போது சிங்கம் கர்ஜிப்பது போல் இருந்தது.
சிறு குறிப்பு கூட இல்லாமல் மேடையில் பேசியை பார்த்து ரஜினிகாந்தையே அசர வைத்துவிட்டார். அவரது பரிணாம வளர்ச்சியாகத்தான் தம்பி துரை வைகோவை நான் பார்க்கிறேன். அவர் பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் வணங்குவேன் எனக் கூறுகிறார். இதுதான் இன்றைய பரிணாம வளர்ச்சி
ன்று அவரின் பரிணாம வளர்ச்சியாகத்தான் தம்பி துரை வைகோவைப் பார்க்கிறேன். வாழ்க்கையை முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஆன்மீகம் தான் என தம்பி ராமையா பேசினார்.





















