மேலும் அறிய
மதுரையில் புத்தகத் திருவிழா 2025: எழுத்தாளர்கள், மாணவர்களுக்கு கொண்டாட்டம்! தேதி, நேரம் இதோ!
புத்தகத் திருவிழா 2025" நடைபெறவுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தகவல்.

புத்தகம்
மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் புத்தகத் திருவிழா - 2025
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று 05.09.2025 முதல் 15.09.2025 வரையில் புத்தகத் திருவிழா 2025 நடைபெறவுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று மாலை 06.00 மணியளவில் நடைபெறும் விழாவில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள்.
பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன
புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி
அதேபோல, தினந்தோறும் மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தினந்தோறும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் "சிந்தனை அரங்கம்" நிகழ்ச்சி நடைபெற உள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை அரங்குள் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறலாம்
மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்திடவும், புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















