கடக ராசி - காதல் வாழ்க்கை எப்படிப்பட்டது?
பெரும்பாலும் கடக ராசிக்கு நல்ல காதல் அமைப்பு இருந்தாலும் கூட… சில சமயங்களில் வேலை வாய்ப்புக்காகவோ அல்லது படிப்பிற்காகவோ நீங்கள் விரும்புபவரை சிறிய பிரிய நேரிடலாம்…

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே ராசியில் சந்திரன் ஆட்சி பெறுகிறார்… பூமிக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு சாட்டிலைட் சந்திரன் தான்… அந்த சந்திரனை அடிப்படையாக வைத்து தான் ராசிகள் பிரிக்கப்படுகிறது… காதல் என்று சொல்லும் பொழுதே சந்திரனை தான் குறிப்பிடுவார்கள்.. காதலிக்கும் பொழுது நிலாவை பார்த்து
பெண் அழகு.. அதுவும் நிலாவை போன்ற பொலிவான முகம் என்றெல்லாம் வர்ணிப்பார்கள்… இப்படியான சூழ்நிலையில் உங்களுடைய காதல் அதிபதியாக ஐந்தாம் பாவம் விருச்சிக ராசி வருகிறது… தூய்மையான காதல் தாயுள்ளம் கொண்டவர் நீங்கள்.. உங்களுடைய வாழ்க்கைத் துணை வரை ஒரு பிள்ளையை எப்படி ஒரு தாய் பாசத்தோடு நேசத்தோடு எந்த சூழ்நிலை வந்தாலும் விட்டுக் கொடுக்காமல் நேசிப்பாரோ அது போல நீங்களும் நேசிப்பீர்கள்… சிறிய அடிபட்டால் கூட பதறிப் போய் விடுவீர்கள் உங்களது மனம் அவர்களை சுற்றி இருக்கும்… இரண்டு நாள் பிரிவை கூட முழுதாக தாங்க முடியாமல் எப்பொழுது சந்திக்கலாம் என்று ஏங்கி தவிக்கும்....
பெரும்பாலும் கடக ராசிக்கு நல்ல காதல் அமைப்பு இருந்தாலும் கூட… சில சமயங்களில் வேலை வாய்ப்புக்காகவோ அல்லது படிப்பிற்காகவோ நீங்கள் விரும்புபவரை சிறிய பிரிய நேரிடலாம்… அப்படியான சூழ்நிலையில் இருவரும் வெவ்வேறு திசையில் பயணித்து வேலைகளை செய்துக்கொண்டிருப்பார்கள்..அந்த காலமாக இருந்தால் கடிதம் வாயிலாகவோ இந்த காலமாக இருந்தால் தொலைபேசி whatsapp வாயிலாகவோ உங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டிருப்பீர்கள்...
உற்றார் உறவினரை தாண்டி நீங்கள் நேசிப்பவரை மட்டுமே நம்பி இருப்பீர்கள்... விரும்பியவருக்கு நல்ல வீடு, வாகனம்… அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து… அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நல்ல எண்ணத்தோடு செயல்படுவீர்கள்...
உங்களுக்கு பெரிய பலமே அதிகாரம் தான்… நீங்கள் சொன்னால் அப்படியே கேட்கின்ற அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை துணை அமைவர்கள்… அவர்கள் எப்படி வாழ வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்பது போன்ற நல்ல வழிகாட்டுதல்களை நீங்கள் மேற்கொள்வீர்கள்... கோபத்தை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்..
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள்.. அதுபோல நீங்கள் ஆத்திரப்பட்டாலும் ஐந்து நிமிடத்திற்கு மேல் நீடிக்காமல் உடனடியாக விரும்பி அவரிடம் பேசத் துடிப்பீர்கள்... சூழ்நிலைகளை பொறுமையாக கையாளுங்கள், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது... முடிந்தவர்கள் அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் சென்று வாருங்கள்…
உங்களை நம்பி வந்தவர்களை வீட்டோடு அனைத்து அவர்களை பத்திரமாக பாதுகாத்து அவர்களுக்கு வேண்டியவைகளை செய்து வாழ்க்கையில் இறுதிவரை அவர்களோடு இருந்து தள்ளாத காலத்திலும் தாங்கி பிடித்து வாழ்க்கைத் துணையோடு வாழ்வது உங்களின் பாசத்தைக் காட்டும்… எவ்வளவு பெரிய இடர்பாடுகள் கொடுத்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நேசிப்பவரை நம்பி வந்தவரை கைவிடாமல் காத்து நின்று அழகாக பேசி அவர்களை வழிநடத்தக்கூடிய சக்தி உங்களுக்கு எப்போதும் உண்டு…
வாழ்க்கை துணையோடு பெரிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அருகிலுள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வாருங்கள் தாயார் உங்களை எல்லா விதத்திலும் வழி நடத்தி உங்களுடைய சங்கடங்களை தீர்த்து வைப்பார்…





















