மேலும் அறிய

நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி: டிடிவி தினகரன் வெளியேறியது ஏன்? அதிமுக- பாஜக கூட்டணிக்குள் சமரசமா?

அமித்ஷா முன்னிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என அண்ணாமலை கூட பேசியிருக்கிறார். - நயினார் நாகேந்திரன் பேட்டி.

முகூர்த்த நாள் என்பதால் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நானே செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. தலைவராக இருந்ததால் சென்றேன். - நயினார் நாகேந்திரன்.

யாரும் வெளியேறுவதற்கு நான் காரணமாக முடியாது.
 
மதுரை தெப்பக்குளம் பகுதியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்..,” டிடிவி தினகரன் மீது எனக்கு என்றும் மதிப்புண்டு. 2021 சட்டமன்ற தேர்தலில் சசிகலா, டிடிவி இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என சொன்னவன் நான். அந்தளவுக்கு அவர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். அமித்ஷா யாரை முதலமைச்சர் என சொல்கிறாரோ அவருக்காக வேலை செய்ய தயார் என சொன்னவர் தினகரன். அவருக்கு ஏற்பட்ட வருத்தத்தை தேசிய தலைமையுடன் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சூழ்நிலைகள் காரணமாக தினகரன் வெளியேறுவதற்கு நான் பொறுப்பாக முடியாது. அதிமுகவை பொறுத்தவரை எனக்கு எல்லோரும் நண்பர்கள், எனவே யாரும் வெளியேறுவதற்கு நான் காரணமாக முடியாது.  தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேச தயாராக இருக்கிறேன். நிச்சயமாக சமரச பேச்சுவார்த்தை நடக்கும்.
 
செங்கோட்டையன் நகர்வுகளுக்கு பாஜக காரணம் அல்ல
 
அமித்ஷா முன்னிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என அண்ணாமலை கூட பேசியிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி தான் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டார் என சொல்லும் தினகரன் இதற்கு என்ன பதில் சொல்வார்? திமுக ஆட்சியில் இருக்க கூடாது என உண்மையாக நினைத்திருந்தால் தினகரன் வெளியே போயிருக்க மாட்டார். அதிமுகவை முன்வைத்து நடக்கும் பிரச்னைகளுக்கு அண்ணாமலை எப்படி காரணமாக இருப்பார்? அவர் எங்களுடைய கட்சி. செங்கோட்டையன் நகர்வுகளுக்கு பாஜக காரணம் அல்ல. யாருடைய பின்னாலும் பாஜக இல்லை. முகூர்த்த நாள் என்பதால் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நானே செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. தலைவராக இருந்ததால் சென்றேன். அண்ணாமலைக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
 
தலைப்பு செய்திகள்

குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
மதுரையில் தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட முகாம்: 12 துறைகள் பங்கேற்பு!
மதுரையில் தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட முகாம்: 12 துறைகள் பங்கேற்பு!
TNEB கள உதவியாளர்: மின்கம்பம் ஏறும் செய்முறை தேர்வுக்கு இலவச பயிற்சி - விருதுநகர்!
TNEB கள உதவியாளர்: மின்கம்பம் ஏறும் செய்முறை தேர்வுக்கு இலவச பயிற்சி - விருதுநகர்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget