அடங்கமாட்டாரு போலயே... யுவராஜை பார்த்து பயம்! விராட் கோலியை விமர்சித்த யுவராஜ் சிங்கின் தந்தை
'யுவராஜைப் பார்த்து மக்கள் எப்போதும் பயந்தார்கள், அவர் தங்கள் இடத்தை அபகரித்துவிடுவார் என்று அவர்கள் பயந்தார்கள், ஏனென்றால் கடவுள் அவரை ஒரு சிறந்த வீரராக ஆக்கியுள்ளார்' என்று யோகராஜ் சிங் கூறினார்

சர்ச்சையான கருத்துக்களுக்கு பெயர் போன முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங் இந்த முறை நட்சத்திர வீரர் விராட் கோலி விமர்சித்து பேசியுள்ளார்.
விராட் கோலி மீது காட்டம்
யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை குறிவைத்தும் யுவராஜுக்கும் விராட்டுக்கும் இடையிலான பிணைப்பு குறித்து யோகராஜ் சிங் கூறுகையில், அவர்கள் ஒருபோதும் நண்பர்களாக இருந்ததில்லை. யுவராஜ் சிங் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் விராட் கோலியின் தலைமையில் விளையாடினார், ஆனால் புற்றுநோயை தோற்கடித்து கிரிக்கெட்டுக்குத் திரும்பிய பிறகு, யுவராஜுக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
யுவராஜை பார்த்து பயம்:
'வெற்றி, பணம், பெருமை ஆகியவற்றுக்கு நண்பர்கள் இல்லை' என்று பேசிய யோகராஜ் சிங் பணம், பெருமை ஆகியவற்றுக்கு நண்பர்கள் இல்லை. எப்போதும் உங்கள் முதுகில் குத்துபவர்கள் இருக்கிறார்கள், நீங்கள் முன்னேறிச் செல்ல விட விரும்பாதவர்கள் இவர்கள்' என்று கூறினார். 'யுவராஜைப் பார்த்து மக்கள் எப்போதும் பயந்தார்கள், அவர் தங்கள் இடத்தை அபகரித்துவிடுவார் என்று அவர்கள் பயந்தார்கள், ஏனென்றால் கடவுள் அவரை ஒரு சிறந்த வீரராக ஆக்கியுள்ளார்' என்று யோகராஜ் சிங் மேலும் கூறினார்.
கம்பேக்கில் சொதப்பிய யுவராஜ்
புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு யுவராஜ் சிங் இந்திய அணிக்குத் கம்பேக் கொடுத்த போது, எம்.எஸ். தோனிக்குப் பிறகு விராட் கோலி உடனடியாக கேப்டனானார். யுவராஜ் 2017 ஆம் ஆண்டில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், 2014 மற்றும் 2017 க்கு இடையில் 24 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடினார். அதேசமயம், கோலியின் தலைமையில், யுவராஜ் 3 டி20 சர்வதேச போட்டிகளிலும் 11 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடினார். யுவராஜ் 2014 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியிலும் ஒரு பகுதியாக இருந்தார். அந்த நேரத்தில் விராட்டும் யுவராஜும் ஒன்றாக விளையாடினார்கள்.
யுவராஜ் சிங் தனது சர்வதேச வாழ்க்கையில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 33.92 சராசரியாக 1900 ரன்கள் எடுத்தார்.யுவராஜ் 304 ஒருநாள் போட்டிகளில் 36.55 சராசரியாக 8,701 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில், யுவராஜ் சிங் 58 போட்டிகளில் 28.02 சராசரியாக 1,177 ரன்கள் எடுத்துள்ளார்.





















