சேலத்தில் கொண்டாடப்பட்ட 76வது சுதந்திர தினம் - தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
![சேலத்தில் கொண்டாடப்பட்ட 76வது சுதந்திர தினம் - தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர் Salem District Collector unfurled the national flag on the occasion of the country's 75th Independence Day TNN சேலத்தில் கொண்டாடப்பட்ட 76வது சுதந்திர தினம் - தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/15/0dc66ed3ef337485167695ae5ccc3dc71660551246644189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய திருநாட்டின் 76வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 145 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கிய அவர், 33 பயனாளிகளுக்கு 57.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதேபோல் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சேலம் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூவர்ண வண்ண விளக்குகளால் மேட்டூர் அணை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாநகராட்சி அலுவலகம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் என பல இடங்களில் வண்ண விளக்குங்களால் அலங்கரிக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் தேசியக்கொடி போன்று காவி நிறம், வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறத்தில் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு தண்ணீரில் ஒளிர வைக்கப்பட்ட வருகிறது. சிறு பாய்ந்து வரும் காவிரி ஆற்றல் இந்திய திருநாட்டில் பெருமையை உணர்த்தும் விதமாக மூவர்ண வண்ண விளக்குகளை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேட்டூர் அணை 16 கண் மதகின் புதிய பாலத்தில் குவிந்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நவீன 3டி விளக்குகள் மூலம் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் தேசிய கொடி பறக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர பொதுமக்கள் மாலை நேரங்களில் கண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான மின் விளக்குகளால் இந்திய திருநாட்டின் மூவர்ண நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வண்ண விளக்குகளை கொண்டு இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கிறது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வண்ண விளக்குகள் மூலம் பாரதி திருநாட்டில் மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வண்ண இலக்குகளை கொண்டு மூவர்ணக் கொடி ஒளிர வைக்கப்பட்டுள்ளது.
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)