வில்லனாக நடிக்கமாட்டேன் என்ற வித்யுத் ஜம்வால்..சிவகார்த்திகேயன் படத்திற்கு ஓக்கே சொன்னது எப்டி
இனிமேல் வில்லன் ரோலில் நடிக்கவே மாட்டேன் என்றிருந்த இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கு எப்படி ஓக்கே சொன்னார் தெரியுமா

மதராஸி
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு மதராஸி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. ருக்மினி வசந்த் , பிஜூ மேனன் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
வில்லனாக நடிக்க மாட்டேன் என்று வித்யுத் ஜம்வால்
சிவகார்த்திகேயன் தவிர்த்து மதராஸி படத்தில் ரசிகர்களை கவர்ந்த மற்றொரு நடிகர் வித்யுத் ஜம்வால் . ஃபிட்டான உடல், பறக்கும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் வித்யுத் ஜம்வால் (Vidyut Jammwal). ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தியில் இவர் நடித்த கமாண்டோ, ஆக்ஷன் பட வரிசை வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது மறுபடியும் தமிழுக்கு அவர் வருகைத் தந்துள்ளது இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
#ARMurugadoss About #Madharasi in a Recent Interview ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) February 18, 2025
• Vidyut had said No to acting as a villain even in big hero films in the north.. But when I reached out to him, the first thing he told me was that he'd do the film no matter how the script was..🤝💥
• Biju Menon and… pic.twitter.com/SXdrc2gGtX
இனிமேல் வில்லன் ரோல்களில் நடிக்கவே மாட்டேன் என வித்யுத் ஜம்வால் உறுதியாக இருந்து வந்தார். ஆனால் மதராஸி படத்தில் வில்லனாக நடிக்க அவர் எப்படி சம்மதித்தார் என்கிற கேள்வி பரவலாக இருந்து வந்தது. இதுகுறித்து இயக்குநர் முருகதாஸ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் " இந்தியில் பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் நெகட்டிவ் ரோல் என்றால் நடிக்கவே மாட்டேன் என வித்யுத் தெரிவித்துள்ளார். ஆனால் நான் அவரை பார்க்க சென்றதும் கதை எப்படி இருந்தாலும் தான் நடிப்பதாக அவர் சொன்னார்" என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.





















