Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வென்றிருக்கும் சூழலில், தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்தும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் அளித்த தீர்பை ஏற்றுக்கொளவதாக தோல்வி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 40-க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைநகரில் பாஜக ஆட்சி அமைய இருப்பதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி ஆட்சிக் கட்சி 20க்கும் அதிகமான இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி நித தேர்தலில் தோல்வி அடையும் என தேர்தல் கணிப்புகள் தெரிவித்தனர். இருந்தாலும், அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி எதிர்பாராதது. அவரது சொந்த தொகுதியான புது டெல்லியில், பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆம் ஆத்மி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் மூத்த அமைச்சரான மணிஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில், சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
தேர்தல் தோல்வி குறித்து வீடியோவில் பேசியுள்ள அரவிந்த கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கிறோம். பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள். மக்களின் நலனை கருத்தில், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கான பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது. சுகாதாரம், கல்வி, நிர்வாகம் ஆகிய துறைகளில் 10 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை செய்திருக்கிறோம். சிறந்த எதிர்கட்சியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மக்களின் நலனுக்காக அவர்களுடன் களத்தில் இருப்போம். என்று தெரிவித்திருக்கிறார்.





















