மேலும் அறிய

TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்

TN fishermen arrest: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

TN fishermen arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

14 தமிழக மீனவர்கள் கைது:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிய சேர்ந்த மீனவர்கள், வடக்கு மன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தொடர் கைது நடவடிக்கைகள், ராமேஸ்வரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் மட்டுமின்றி, சிறைகளில் அடைக்கப்பட்டு வாழ்க்கையையே தொலைப்பதாக மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

போராட்டங்கள் வீணா?

ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியபடி தான் உள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிகக்ள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனாலும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண எந்த உரிய நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. அதன் விளைவாக தான்,  தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடரும் மீனவர்கள் கைது:

  • கடந்த மாதம் 12ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
  • கடந்த 26ம் தேதியன்று தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
  • கடந்த மாதம் 28ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
  • கடந்த 30ம் தேதி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் இலங்கை கடற்படை செய்தது
  • கடந்த 3ம் தேதி தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை, படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget