Karthigai Deepam: கார்த்திக்கு ஷாக் தந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று நடக்கப்போவது என்ன?
கார்த்திகை தீபம் தொடரில் கார்த்திக்கிற்கு ரேவதியும், சாமுண்டீஸ்வரியும் சேர்ந்து அடுத்தடுத்து ஷாக் தர என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மயில்வாகனம் புடவையை மாற்றி வைக்க அது ரேவதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பரமேஸ்வரியைச் சந்திக்கும் ரேவதி:
அதாவது ரேவதி நீங்க புடவை மாத்தி வச்ச விஷயம் எனக்கு தெரியும். எதுக்காக அப்படி செஞ்சீங்க? என்று கேட்க பரமேஸ்வரி பாட்டி தான் மாற்றி வைக்க சொன்னதாக சொல்கிறான். உடனே ரேவதி எனக்கு பாட்டி கிட்ட பேசணும் போன் நம்பர் குடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறாள்.
அடுத்ததாக ரேவதி பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி கோவிலில் சந்திக்கிறாள். எதுக்காக இப்படி பண்ணிங்க என்று கேட்க பாட்டி நீ அந்த புடவையை கட்டிக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்ல ரேவதி நீங்களும் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வரணும் என்று கூப்பிடுகிறாள்.
கார்த்திக்கிற்கு ஷாக் தந்த சாமுண்டீஸ்வரி:
அடுத்ததாக வீட்டில் சாமுண்டீஸ்வரி எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சா? என்று கேள்வி எழுப்ப, ரேவதிக்கு கார்த்தியின் அம்மாவுக்கு பத்திரிகை கொடுக்க வேண்டும் என்ற ஞாபகம் வருகிறது. இதைக் கேட்டு கார்த்திக் ஷாக் ஆகிறான்.
மேலும் சாமுண்டீஸ்வரி பத்திரிக்கை கொடுக்க தானும் வருவதாக சொல்ல கார்த்திக் மேலும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

