விஜயை அப்படிதான் ப்ரோமோட் பண்ணேன்... ரகசியத்தை சொன்ன எஸ்.ஏ.சி
விஜய் திரைக்கை நடிக்கவந்த போது அவரை தான் எப்படி எல்லாம் ப்ரோமோட் செய்தார் என இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

விஜய்
நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். ரொமான்ஸ் , காமெடி , ஆக்ஷன் என பல வித ஜானர்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் விஜய். தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தைத் தொடர்ந்து சினிமாவை முழுவதுமாக விட்டு அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய். சினிமாவை விட்டு விஜய் சினிமாவை விட்டு முழுவதும் அரசியலுக்கு வரும் தருணம் தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விஜயை ஆரம்ப காலத்தில் ஒரு நடிகனாக எப்படி ப்ரோமோட் செய்தார் என விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
விஜயை எப்படி ப்ரோமோட் செய்தேன்
" நானும் விஜய்காந்தும் சேர்ந்து நிறைய படம் பண்ணியிருக்கோம். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நான் புதுமுகம் . விஜயகாந்தும் புதுமுகம் தான். நான் நினைத்திருந்தால் அந்த படத்திற்கு பெரிய ஒளிப்பதிவாளர் , பெரிய இசையமைப்பாளராக போட்டிருக்கலாம். ஆனால் அந்த படம் ஓடியதற்கு யார் காரணம் என்று கேட்பார்கள். ஒளிப்பதிவாளரால தான் அந்த படம் ஓடுச்சு , மியூசிக் டைரக்டராலதான் படம் ஓடுச்சுனு சொல்லிட்டா அந்த ஹீரோவுக்கு வேல்யூ இல்லாமல் போயிடும்."
அதனால் தான் என் படத்திற்கு புதிய இசையமைப்பாளர், புதிய எடிட்டர் , புதிய கேமராமேனை போட்டேன். அப்போதான் அந்த படத்தின் வெற்றி மொத்தமும் அந்த ஹீரோ தலையில் சேரும். அப்படிதான் ஒரு ஹீரோ தலைவனாக முடியும். அடுத்தடுத்து பெரிய டைரக்டரோட படம் பண்ணனும்னு எதிர்பார்ப்பு உருவாகும். அப்படி அந்த எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணலனா அந்த ஹீரோ அவ்ளோதான். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கு ஆனா நான் பெயர் சொல்ல விரும்பல.
என் சொந்த மகன் விஜயையும் நான் இப்படிதான் ப்ரோமோட் பண்ணேன். நாளைய தீர்ப்பு படத்தின் போது நான் என் கரியரின் உச்சத்தில் இருந்தேன். நிறைய பணம் வந்தது. நான் நினைத்திருந்தால் பெரிய டெக்னிசியன்ஸ் போட்டிருக்கலாம். புது இசையமைப்பாளர் , புது கேமராமேன் தான் போட்டேன். விஜயின் முதல் பத்து படங்களை பார்த்தீர்களானால் தெரியும். இப்படிதான் விஜய் உருவானார். விஜயை இப்படி எல்லாம் தான் ப்ரோமோட் செய்தேன்' என எஸ்.ஏ. சி தெரிவித்துள்ளார்