சரக்குல இவ்ளோ இருக்கா...ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இதை நோட் பண்ணிருக்கீங்களா
ஜேம்ஸ் பாண்ட் எப்போதும் மார்ட்டினி என்கிற மது மட்டுமே அருந்துவார். ஆனால் இந்த மதுவை அவர் எப்போது குறிப்பிட்ட விதத்தில் மட்டுமே அருந்துவதில் தான் ரகசியம் இருக்கிறது

ஜேம்ஸ் பாண்ட் 007
1953 ஆம் ஆண்டு ஐயன் ஃப்லெம்மிங் என்கிற பிரிட்டிஷ் எழுத்தாளர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட். அமெரிக்க ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டை மையமாக வைத்து இதுவரை 27 படங்கள் வெளியாகி இருக்கின்றன. சான் கானரி, டேவிட் நிவன், ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் ப்ரோஸ்னன் மற்றும் டேனியல் கிரேக் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார்கள். பெண்களை கவரும் வசீகரம் , அதிநவீன தொழில்நுட்பங்களில் தேர்ந்த , அதிரடி சாகசங்களை செய்யக்கூடிய ஒரு தந்திரமான மனிதனாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. ஸ்பை த்ரில்லர் படங்கள் என்றால் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் சாயல் இல்லாமல் இருக்காது.
இதை நோட் பண்ணியிருக்கீங்களா
ஜேம்ஸ் பாண்ட் எப்போது அருந்தும் மது மார்ட்டினி. ஜின் அல்லது வோட்காவை , எலுமிச்சை கலந்து உருவாக்கப்படும் ஒரு காக்டெயில் மார்ட்டினி. மார்ட்டினியை இரண்டு விதமாக ஆர்டர் செய்யலாம். ஒன்று மார்ட்டினியில் ஐஸ் போட்டு அதை நன்றாக கலக்கி அருந்தலாம். இன்னொன்று மார்ட்டினியை நன்றாக குலுக்கி அருந்தலாம். இதில் இரண்டாவது விதமாக தான் ஜேம்ஸ் பாண்ட் எப்போதும் தனது மார்ட்டினியை ஆர்டர் செய்வார். குலுக்கும் போது மது அடியிலும் மேல் பரப்பில் தண்ணீர் மட்டுமே இருக்குமாம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஜேம்ஸ் பாண்ட் மது அருந்துவது போல் தெரிந்தாலும் உண்மையில் ஜேம்ஸ் பாண்ட் குடிப்பது தண்ணீரைதான். பலர் அவர் போதையில் இருப்பதாக நினைக்கையில் அவர் அலர்ட்டாக இருப்பது அவருக்கு மட்டுமே தெரியும். இதனால் தான் ஜேம்ஸ் பாண்ட் ஒரு சிறந்த ரகசிய ஏஜண்டாக கருதப்படுகிறார்.
View this post on Instagram





















