OPS Wife Passed Away | ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்
ஓபிஎஸ் மனைவி மறைவால் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மாரடைப்பால் மரணமடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். மனைவியை பிரிந்த சோகத்துடன் அழுதுகொண்டிருந்த ஓபிஎஸ்க்கு, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அண்ணன் பன்னீர்செல்வத்தின் மனைவியார் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் முதல்வர் கூறினார். அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரணியன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துக்கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் மனைவி மறைவால் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
#BREAKING | ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி https://t.co/wupaoCQKa2 | #OPanneerselvam | #OPS | #AIADMK | #MKStalin pic.twitter.com/GA973YM35W
— ABP Nadu (@abpnadu) September 1, 2021
ஓபிஎம் மனைவி இறப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் பொது வாழ்க்கையில் புகழ்பெற காரணமாக இருந்தவர் அவர் மனைவி, அவரின் இறப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு துக்கத்தையும் துயரத்தையும் ஏற்படுத்த கூடிய இழப்பாகும் என்று கூறினார்.
திருமதி.விஜயலட்சுமி அவர்களின் மறைவு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேரிழப்பு.
— M.K.Stalin (@mkstalin) September 1, 2021
இல்லத் துணையை இழந்து வாடும் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/meq8p3s6Wu
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.45 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. ஓபிஎஸ் மனைவியின் மரணத்தால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிற கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த சென்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று மதியம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
விஜயலட்சுமி, ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்தபோதும், துணை முதலமைச்சராக இருந்தபோதும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஓபிஎஸ் பல்வேறு கட்ட பிரச்னைகளை சந்தித்தபோதும் அவருக்கு பக்கபலமாக இருந்தார். கடந்த மே மாதம் ஓபிஎஸ்-ன் சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், மனைவியை இழந்து மருத்துவமனையில் கண்ணீருடன் இருக்கும் ஓபிஎஸ்-க்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Breaking News LIVE Updates: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்