Tamil News LIVE Updates: நாடு முழுவதும் 41,965 பேருக்கு கொரோனா தொற்று
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Background
Latest News in Tamil Today LIVE Updates:
தமிழகத்துள் இன்று முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காகவே பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முன்னதாக தெரிவித்தது. அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
OPS Wife Death: அம்மையார் விஜயலட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
வாழ்க்கைத்துணையை இழந்து பெருந்துயருற்றுள்ள ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயை இழந்து வாடும் தம்பிகள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தங்கை கவிதா ஆகியோருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆதார் - Pan/EPFO இணைப்பு வசதியில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை
UIDAI கடந்த வாரத்தில் அதன் அமைப்புகளில் சில அத்தியாவசிய பாதுகாப்பு மேம்பாட்டைச் செய்து வருவதால், சில ஆதார் பதிவு / புதுப்பித்தல் மையங்களில் பதிவு மற்றும் மொபைல் எண் புதுப்பித்தல் சேவையில் மட்டும் சில சேவை குறுக்கீடுகள் பதிவாகியுள்ளது. அத்தியாவசிய பாதுகாப்பு மேம்பாட்டைச் செய்த பிறகு இப்போது நன்றாக செயல்படுகிறது.
ஆதார் - Pan/EPFO இணைப்பு வசதியில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை என UIDAI தெரிவித்துள்ளது





















