மேலும் அறிய

Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்

தங்கள் மீது தாக்குதல் நடத்திய உன்ரைனுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வரும் நிலையில், நேற்றிரவு தலைநகர் உள்ளிட்ட பல நகரங்களில் மிகப் பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா.

ரஷ்யாவிற்குள் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஒரு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு மிகப்பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உக்ரைனின் தலைநகரும் தாக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்குள் புகுந்த அடித்த ரஷ்யா

உக்ரைனுக்கான பதிலடியின் ஒரு பகுதியாக, நேற்றிரவு, 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். கிவ்-வில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவசரகால உதவியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள செர்னிஹிவ்-வில் 2 பேரும், லட்ஸ்க் நகரில் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதல் உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் இன்னும் பல நகரங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. இதில் உக்ரைனின் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல அரசு கட்டடிங்கள் மற்றம் தனியர்ர் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலத்தடி தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதிலடி தாக்குதல் நடத்திய ரஷ்யா

ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் அதிகாலை, உன்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ப்ரிலுகி நகரின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், 1 வயது குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவின் ட்ரோன்கள் ப்ரிலுகி நகரின் குடியிருப்புப் பகுதிகளை நேற்று அதிகாலை தாக்கியதாகவும்,  அதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உன்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார். 

ப்ரிலுகி நகரின் மீதான தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் கார்கிவ்வின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்லேபிட்ஸ்கி நகரிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் தாக்கியுள்ளன. அதில் குழந்தைகள் உட்பட சுமார் 17 பேர் காயமடைந்ததாக  பிராந்திய ஆளுநர் ஓலே சைனிஹுபோவ் தெரிவித்திருந்தார்.

ட்ரேன்கள் 2 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தாக்கியதாகவும், அந்த தாக்குதலின்போது சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கூறியதுபோலவே, ரஷ்ய அதிபர் புதின் தனது தரப்பு பதில் தாக்குதலை தொடங்கிய நிலையில், நேற்று இரவிலும் அது தொடர்ந்துள்ளது. அதிலும், ட்ரோனுக்கு பதிலடி ட்ரோன் மூலமே கொடுக்கப்பட்டுள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget