ஜவான் படத்தில் தீபிகா படுகோன் அட்லீக்கு செய்த கைமாறு...வெயிட்டா திருப்பிக் கொடுத்த அட்லீ
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார். இதுவரை நடித்திராத முழு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் தீபிகா.

அட்லீ அல்லு அர்ஜூன் கூட்டணி
ஜவான் படத்தைத் தொடர்ந்து அடுத்து அட்லீ என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. இப்படியான நிலையில் தான் அட்லீ அல்லு அர்ஜூன் கூட்டணியில் புதிய படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து மாஸ் காட்டியது. இந்த படத்திற்கு வெளியான டீசர் ரசிகர்களை மிரளவைத்தது என்றே சொல்லலாம். சுமார் 600 கோடி பொருட்செலவில் பிரம்மாண்ட சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் அட்லீ. அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படூகோன் இந்த படத்தின் நாயகியாக அறிவித்துள்ளார்.
மிரளவைக்கும் அட்லீ பட டீசர்
தீபிகா படுகோனின் கதாபாத்திரம் பற்றிய ஒரு டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அவதார் நாயகில் ஸ்டைலில் தீபிகா படுகோனுக்கு ஒரு செம ரோல் ஒன்றை அட்லீ எழுதியிருக்கிறார் என இந்த டீசரைப் பார்த்து சொல்லலாம். தீபிகா படூகோன் சமீபத்தில் பிரபாஸ் படத்தில் இருந்து விலகினார். இதனால் அவரை சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். தற்போது அட்லீ பட அப்டேட்டால் மிரண்டு போயிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
The Queen marches to conquer!❤🔥
— Sun Pictures (@sunpictures) June 7, 2025
Welcome onboard @deepikapadukone✨#TheFacesOfAA22xA6
▶️ https://t.co/LefIldi0M5#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z
அட்லீக்கு தீபிகா செய்த உதவி
அட்லீ இயக்கத்தில் கடைசியாக ஜவான் பட வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக நடித்திருந்தர். தீபிகா படூகோன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கேமியோ செய்தார். ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கும் தீபிகா படூகோன் கேமியோ ரோல்களுக்கு சம்பளம் வாங்குவதில்லை என்கிற கொள்கையை கடைபிடித்து வருகிறார். இதனால் ஜவான் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை . தீபிகா தனக்கு செய்த உதவிக்கு அட்லீ அவருக்கு செம வெயிட்டான ரோல் கொடுத்திருக்கிறார் என நம்பலாம்.
தொழில்நுட்ப குழு
பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் செய்துள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. Spectral motion என்கிற மற்றொரு முன்னணி நிறுவனம் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறது. வித்தியாசமான உயிரினங்களின் தோற்றங்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் பணி. பிரபல ஹாலிவுட் படமான ஹெல்பாய் உட்பட பல படங்களின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தது இந்த் நிறுவனமே . இது தவிர்த்து Fractures FX , ILM technoprops , legacy effects போன்ற முன்னணி விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்க இருக்கிறார் அட்லீ. கேப்டன் அமெரிக்கா , ஸ்பைடர் மேன் , ஐயன் மேன் , அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர்ஸ் ஹீரோஸ் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் கதையை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றுவதை ஒரு சவாலாக அவர்கள் கருதுகிறார்கள்.





















