தூத்துக்குடி: 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! விவரம் உள்ளே
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தாசில்தார்கள் மாவட்டங்களுக்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தாசில்தார்கள் மாவட்டங்களுக்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் , தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இரட்டை அகல ரெயில் பாதை திட்டம் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் கலா, கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்தமல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இரட்டை அகல ரயில் பாதை திட்டம் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் கலா, கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்தமல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் ராஜலட்சுமி, சில்லாநத்தம் சிப்காட் நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு அலகு-1 தனி தாசில்தார் பொன்னுலட்சுமி, சாத்தான்குளம் தாசில்தாராகவும், கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அறிவழகன் என்ற சிவராஜ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அந்தோணிஜெபராஜ் திருச்செந்தூர் தாசில்தாராகவும், வெம்பூர் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி தாசில்தாராகவும், ஏரல் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் கண்ணன் விளாத்திகுளம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
இதேபோல் சாத்தான்குளம் தாசில்தார் இசக்கிமுருகேசுவரி தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் ஏரல் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், எட்டயபுரம் வெம்பூர் சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நிலஎடுப்பு அலகு-1 தனிதாசில்தாராகவும், சில்லாநத்தம் சிப்காட் நில எடுப்பு தனிதாசில்தார் சுப்புலட்சுமி தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும் மாற்றப்படுகிறார்கள். மேலும் அல்லிகுளம் சிப்காட் நில எடுப்பு அலகு-7 தனிதாசில்தார் வாமணன், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-4 தனிதாசில்தாராகவும், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் ராணி, தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும் மாற்றப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தார் செல்வலட்சுமி தெற்குவீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.




















