![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
மாணவர்களை தனது காலை அழுத்தச் சொல்லி, ஆசிரியர் ஒருவர் அறையில் ஓய்வு எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
![ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை Salem news students foot pressed teacher Suspended School Education Department takes action tnn ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/8eec6378cbc575f519ad3375b7d24b791732333128934113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கிழக்கு ராஜபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜெயபிரகாஷ். இவர் பள்ளியில் மாணவர்களை தனது காலை அழுத்தச் சொல்லி, ஆசிரியர் அறையில் ஓய்வு எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஆசிரியர் ஜெயபிரகாஷ், ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கால் அடியில் இரண்டு மாணவர்கள் அமர்ந்து ஆசிரியருக்கு காலை அழுத்துவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.
மேலும், இந்த வீடியோ சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பார்வைக்கு சென்றது. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் வீடியோ குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து, கிழக்கு ராஜபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார். மேலும், மாணவர்களை தனது காலை அழுத்தச் சொல்லி, ஆசிரியர் அறையில் ஓய்வு எடுத்தது குறித்து ஆசிரியர் ஜெயபிரகாஷ் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தொடர்பு கொண்டு ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாதேவியிடம் கேட்டபோது, கடந்த 28ஆம் தேதி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் பள்ளியில் மயங்கி விழுந்தார். இதனால் மாணவர்கள், ஆசிரியர் ஜெயபிரகாசை ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்று கால்களை மாணவர்கள் தடவி விட்டனர். அப்போது சமூக அறிவியல் ஆசிரியர் அமரன் என்பவர் இதனை வீடியோ பதிவு செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை அழைத்து வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் அவர் வீடியோவை டெலிட் செய்யாமல் இருந்துள்ளார். ஏற்கனவே ஆசிரியர் ஜெயபிரகாஷ் மற்றும் அமரன் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் அமரன் தற்போது அந்த வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ முழுக்க முழுக்க முன்விரோதத்தால் எடுக்கப்பட்ட வீடியோ என கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)