மாமிசத்திற்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியலையா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
வடநாடுகளில் மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி அளித்துள்ளார்.

கோமியம் குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி அளித்துள்ளார்.
"மாட்டரசியல் செய்ய வேண்டாம்"
வடநாடுகளில் மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், "ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 21, 2025
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில்…
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.
கோமியம் சர்ச்சை?
இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா? வடநாடுகளில், மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கோமியம் குடித்ததால் தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமானது என்றும், கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் காமகோடி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மீண்டும் கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு ஆதாரம் இருக்கிறது எனவும் ஐஐடி காமகோடி கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி “பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவை கலந்ததே பஞ்சகவ்யம். கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை.
இதையும் படிக்க: TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

