மேலும் அறிய

Today Headlines News: மளிகை சாமான் வாங்க வேண்டுமா? பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்

இன்று முதல் மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய lநிகழ்வுகள் மற்றும் அரசியல் நகர்வுகளை சுருக்கமாக தெளிவாக தரும் முக்கியத் தலைப்புச் செய்திகள் இதோ:   

1. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,28,311 ஆக உள்ளது. இதில், அதிகபட்சமாக  சென்னையில் 32,917 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,346 பேரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

2. தமிழகத்தில் இன்று முதல் புதிய கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இன்று முதல், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறிக் கடைகளுக்கு அனுமதி இல்லை. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. 

3. நேற்று (05/05/2021) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராகத் தான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அளித்தார். இதையடுத்து அவரை முதலமைச்சராக நியமித்த ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழா வருகின்ற நாளை ( 7 மே)  காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஊடக அறிவிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

4. ஐஜி, ஏடிஜிபிக்கள் தலைமையில் மாவட்ட வாரியாக கோவிட்19 தொற்று நடவடிக்கைகளுக்கான குழுவை தமிழக அரசு அறிவித்தது.

Today Headlines News: மளிகை சாமான் வாங்க வேண்டுமா? பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்

Today Headlines News: மளிகை சாமான் வாங்க வேண்டுமா? பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் 

5.. மேற்குவங்க மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் மம்தா பானர்ஜி நேற்று பதவியேற்று கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் தனது ட்விட்டரில்," மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தா அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.

6. கோவிட் - 19 தொடர்பான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் பணப் புழக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். நேற்று, காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், உணவு பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். 

7. சென்னை புறநகர் ரயில்களில் பயணிப்பதற்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் , சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. 

8. கோவிட்-19 பரிசோதனை தொடர்பான நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரிசோதனை மூலம் ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது தெரியவந்தால், அவருக்கு மீண்டும் ஆர் டி பி சி ஆர் சோதனை நடத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

 9. மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை, அலுவலகத்திற்கு வருவதற்கு முழுவதுமாக தமிழக அரசு விலக்கு அளித்தது. 

Today Headlines News: மளிகை சாமான் வாங்க வேண்டுமா? பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்
Caption

10. தமிழகத்திற்கு இதுவரை 71,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8.83 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 67,83,227 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3,20,723 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 1,00,000 தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget