மேலும் அறிய
‘கல்வியில் அரசியலை புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார்’ - அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை என்பதால் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: தமிழகத்தில் கல்வி தரம் உயரவில்லை என்று கூறும் ஆளுநர், தினசரி நாளிதழையாவது படிக்க வேண்டும், அவர் அரசியல்வாதி போன்றும் எதிர்கட்சியினர் போன்று பேசுவது வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 1310 நபர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி ஆட்சியர் பழனி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தமிழர்கள் நல்வேளையாக யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் உடனடியாக இரு அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார் என்றும் பல்வேறு துறைகளில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளில் ஆரம்ப கல்வி வளர்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருவதாகவும் உயர்கல்வி துறையில் படிக்கும் மாணவர்கள் திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார். நான் முதல்வர் திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளதாகவும் தமிழகம் கல்வி தரத்தில் வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். மேலும் கல்வி தரம் உயரவில்லை என்று கூறும் ஆளுநர் தினசரி நாளிதழையாவது படிக்க வேண்டும், அவர் அரசியல் வாதி போன்றும் எதிர்கட்சியினர் போன்று பேசுவது வருந்ததக்கது என தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஊட்டிக்கு துனை வேந்தர்களை அழைத்து கொண்டு அரசியல் பேசுவதற்காக சென்றிருப்பதாகவும், அவர் அங்கு தனியாக சென்றிருக்கலாம், தமிழ் நாட்டில் எப்படி கல்வி வளர்ச்சி தரம் குறைந்து விட்டது என்று கூறுகிறார். அவர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார் என கேள்வி எழுப்பினார். கல்வியிலையே அரசியலை புகுத்த வேண்டுமென தமிழக ஆளுநர் அரசியல் செய்வதாகவும் தமிழகத்தை பொறுத்த வரை இரு மொழிக்கொள்கை தான் ஆளுநரின் சொந்த மாநிலமான பீகாரில் தாய்மொழியையே சரியாக படிக்காதவர்கள் உள்ளதாகவும் பீகார் மாநிலத்தில் எப்படி கல்வி தரம் உள்ளது என்பதை அவர் பார்க்க வேண்டும் என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை. அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை பாஜக மேற்கொண்டு வருவதாகவும் தொழிற்சாலை பெருக வேண்டும் என்பதால் தான் வெளிநாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு தமிழகத்தின் சூழல் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவர் பயணம் மேற்கொண்டார். இதையெல்லாம் ஆளுநர் பாராட்டவில்லை என்றாலும் இதையெல்லாம் அவர் அரசியல் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறினார். ஊட்டியில் குளிர் இருப்பதால் ஆளுநர் அங்கு சென்றுள்ளார் அவர் சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion