மேலும் அறிய
அனுபவி ராஜா அனுபவி.. அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் - செல்லூர் ராஜூ விமர்சனம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியரான ஒருவரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார் - செல்லூர் ராஜூ காட்டம்.

செல்லூர் ராஜூ
செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,”2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் அமையும். அனுபவி ராஜா அனுபவி இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையிலும் வறட்சியிலும் இருந்தபோது தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முதலமைச்சர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார்.
அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியரான ஒருவரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. உலகத் தமிழ் மாநாடு திமுக நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள், கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள் அனுபவிக்கட்டும் இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. எம்.ஜி.ஆரை யாரும் வென்றது கிடையாது கடவுளை யாரும் கண்டது கிடையாது” என்று தெரிவித்தார்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion