”இது தான் திராவிட மாடல் ஆட்சியா?”... கொந்தளித்த முன்னாள் அதிமுக அமைச்சர்..
மதுரையில் இன்பநிதிஉட்கார மதுரை மாவட்ட ஆட்சியர் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதுதான் சமூகநீதியா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு முதல்வரும், துணை முதல்வரும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துக்கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன் அவதாரம்! ஆளுங்கட்சிக்கு அச்சுறுத்தலா? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்:
தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நாளில், ஒரு பக்கம் பிரதமர் மோடி தமிழ் உலகம் போற்றும் மொழி என்றும், தொன்மையான மொழி என்றும் பேசுகிறார். போகிற இடமெல்லாம் திருக்குறள் குறித்து பேசுகிறார். ஆனால் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. நேற்று பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பில்லை. இந்த செயலை தமிழக அரசு கண்டிக்கவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் உதயநிதி ஸ்டாலின் கீழ் இயங்கும் விளையாட்டு துறையில் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பில்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
மதுரையில் இன்பநிதி உட்கார மதுரை மாவட்ட ஆட்சியர் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதுதான் சமூகநீதியா? திராவிட மாடல் ஆட்சியா?. பத்து நாட்களுக்கு முன்பு ஆண்ட பரம்பர என பேசிய அமைச்சர் மூர்த்தி இன்பநிதி உடையில் இருந்த தூசை தட்டிவிட்டார். 5 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று சி.வி சண்முகம் பேசினார்,
பணத்தையும், ஊடகங்களையும் கையில் வைத்துக் கொண்டு வெற்றி பெறலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் விரோத அரசை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை தூக்கி எறிய சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளது என பேசினார்.

