ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
வடிவேலுவுடன் காமெடி வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்த பிரியங்கா தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை உண்மையில் அப்படி இருப்பதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பல நடிகர்கள், நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். மனதில் சோகம் இருந்தாலும், வெள்ளந்தியான பேச்சு, சிரிப்புடன் திரையில் மக்களை ரசிக்க வைத்து வரும் பிரியங்கா திருமண முறிவு குறித்தும் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.
ஏமாத்தி கிளாமராக நடிக்க வைச்சாங்க
காமெடி நடிகர்களான விவேக், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மருதமலை படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இன்றைக்கும் மீம் கிரியேட்டர்களுக்கு தகுந்த கன்டன்டாகவும் இருக்கிறது. இந்நிலையில், சினிமா பயணம் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு என்ன படம் தெரியாமலேயே ஏமாத்தி கிளாமர் வேடத்தில் நடிக்க வைச்சுட்டாங்க. நான் ரொம் பயந்தாங்கோலி எதையும் தைரியமா சொல்லமாட்டேன். நல்லா நடிக்கனும் யாரும் திட்டுவாங்களோ என்று பயப்படுவேன். எனக்கு என்ன வேண்டும் என்று கூட சொல்ல தெரியாது. அதுக்கப்புறம் அதுமாதிரி நடிக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன் என தெரிவித்தார்.
விவாகரத்து
பேட்டியின் நடுவே திரையில் பார்த்த பிரியங்காவா இது என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவரது பேச்சும், சிரிப்பும் இருந்தன. திருமண வாழ்க்கை குறித்து பேசிய பிரியங்கா, திருமணத்திற்கு அப்புறம் நடிக்க கூடாது என் முன்னாள் கணவர் தெரிவித்துவிட்டார். சரி நானும் ஓகே சொன்னேன். 6 வருஷம் தஞ்சாவூரில் தான் இருந்தேன். அப்போ சிங்கம் படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க நா வர முடியாது சொல்லிட்டேன். 2 பெண் குழந்தைகள் இருக்கு. 2 குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறம் என் முன்னாள் கணவருக்கு என்னை பிடிக்கலை சொல்லிட்டாரு. கடவுள் நமக்கு எழுதி வைத்தது இவ்வளவுதான் இருந்தேன் என மன வேதனையுடன் பிரியங்கா தெரிவித்தார்.
அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்
திருமண வாழ்க்கை சரியா அமையலைனு எல்லோரும் வருத்தப்பட்டாங்க. சினிமாகாரி அதான் வாழ்க்கை சரியில்லை சொல்லிடுவாங்கனு அட்ஜஸ்ட் பண்ணிதான் இருந்தேன். ஆனால், எனக்கு என் குடும்பம் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. பிடிக்கலைனா அங்க இருக்காத. தவறான உறவில் இருந்து கஸ்டப்படுறதை விட விலகி இருப்பதே மேல் என்று நினைத்து வந்துவிட்டேன். நான் வந்ததுக்கு அப்புறம் எனது முன்னாள் கணவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்திருக்கு. அதே மாதிரி என்னையும் மறு திருமணம் செய்ய வீட்டில் சொன்னாங்க. அய்யோ சாமி ஒரு கல்யாணமே போதும். இதுலேயே பல பிரச்னைகளை பார்த்து விட்டேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கல்யாணமே பண்ணமாட்டேன். படத்துலதான் 5 புருஷன் இருக்க மாதிரி காமெடிக்காக நடித்தேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் அது ஒத்து வராது. என் குழந்தைங்க இதுவே போதும் என பிரியங்கா தெரிவித்தார்.
ரிதன்யா பார்த்து அழுதேன்
நான் இப்போ நிறைய பேர்கிட்ட சொல்றது கல்யாணம் பண்ணி கஸ்டப்படாதீங்க. சமீபத்தில் ரிதன்யாவை பார்த்து அழுகையே வந்திடுச்சு. அந்த பொண்ணு வீடியோவை பார்த்தேன். எவ்வளவு எதிர்பார்ப்போடு இருந்திருக்கும். குடும்பம் சப்போர்ட் பண்ணிருந்தா இதுமாதிரி நடந்திருக்காது. எனக்கு என் குடும்பம் பக்கபலமா இருந்தாங்க என பிரியங்கா தெரிவித்தார்.





















