P Chidambaram : காங்கிரசுக்கு எதிராக ஆஜராகிய ப.சிதம்பரம்..! காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு..
கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆஜராகிய ப.சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் பொறுப்பு வகித்தவர். மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கொல்கத்தாவில் அரசுக்கு சொந்தமான பால்வளத்துறை பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு விற்றதாக ஆளுங்கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மேலும், இதுதொடர்பாக மேற்குவங்க காங்கிரஸ் கட்சியினர் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி யார் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்களோ, அவர்களுக்கு ஆதரவாக வாதாட காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆஜராகினார்.
இது காங்கிரஸ் கட்சியின் சார்பான வழக்கறிஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் ப.சிதம்பரத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ப.சிதம்பரம் அவரது காருக்கு செல்லும் வரை அவரை பின்தொடர்ந்து சென்று ஆங்கிலத்தில் சரமாரியாக ப.சிதம்பரத்தை கேள்வி எழுப்பினர்.
#WATCH | Congress leader & advocate P Chidambaram faced protest by lawyers of Congress Cell at Calcutta HC where he was present in connection with a legal matter. They shouted slogans, showed him black robes & called him a TMC sympathiser & responsible for party's poor show in WB pic.twitter.com/SlH4QgbJSn
— ANI (@ANI) May 4, 2022
மேலும், அவரது காரின் முன்பு நின்று மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் மோசமாக செயல்படுவதற்கு ப.சிதம்பரம்தான் காரணம் என்றும், ப.சிதம்பரம் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர் என்றும் கோஷம் எழுப்பினர். ப.சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்ட கோஷங்கள் எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Prithvi Shaw: என் வீட்டைப்பார் என்னைப் பிடிக்கும்.. ரூ. 10.5 கோடிக்கு அபார்ட்மெண்ட் வாங்கும் பிரித்வி ஷா!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்