Prithvi Shaw: என் வீட்டைப்பார் என்னைப் பிடிக்கும்.. ரூ. 10.5 கோடிக்கு அபார்ட்மெண்ட் வாங்கும் பிரித்வி ஷா!!
மும்பை பாந்த்ராவில் 10.5 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமான புதிய அபார்ட்மெண்ட்டை வாங்குகிறார் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா
மும்பை பாந்த்ராவில் 10.5 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமான புதிய அபார்ட்மெண்ட்டை வாங்குகிறார் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பிறகு, மும்பையில் உள்ள ஒரு வாங்க முடிவு செய்துள்ளார் பிரித்வி ஷா. இந்திய அணியின் வளர்ந்து வரும் பேட்டிங் திறமைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் பிரித்வி ஷா திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் இளம் வீரரான பிரித்வி ஷா சில காலமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், அவர் உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
2018-ஆம் ஆண்டு 19 வயதுக்கு கீழோருக்கான உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக திகழும் பிரித்வி ஷா, இளம் வயதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சில சிறந்த முதலீடுகளை செய்ய முடிவு செய்துள்ளார். மும்பையின் பாந்த்ராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ஷா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் புகழ்பெற்ற பல பிரபலங்கள் வாழ்ந்து வருவதாகவும், இப்பகுதி 'புறநகர்களின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது.பிரித்வி ஷா வாங்க உள்ளதாக கூறப்படும் அப்பார்ட்மெண்ட் ஏப்ரல் 28 அன்று பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் 2022 தொடரில் டெல்லி கேபிடல்ஸின் முக்கியமான விளையாட்டு வீரராக கருதப்படும் வீரர்களில் பிருத்வி ஷாவும் ஒருவர். இந்த சீசனில் அவருக்கு ரூ.7.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது போட்டிகளில் இருந்து 28.78 சராசரியுடன் மொத்தமாக 259 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 159.88 ஸ்ட்ரைக் ரேட்டுடன்,இரண்டு அரைசதங்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 61 ரன்களை பிருத்வி ஷா எடுத்துள்ளார். வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான பிரித்வி ஷா, இப்போது மீதமுள்ள ஐபில் போட்டிகளில் தனது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் உள்ளார். 22வயதான பிருத்வி ஷா, இந்த இளம் வயதில் ஆடம்பரமான அப்பார்ட்மெண்ட்டை வாங்க முடிவு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது