கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொலை: மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டம்..
அவசரகால பணி சேவை மட்டும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளிய நோயாளி சிகிச்சை பிரிவை புறக்கணித்து ஒருமணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் ஸ்டிரைக்:
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான மருத்துவரான அவரை மருத்துவமனைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் மர்மநபர்கள் புகுந்து போராட்டத்தை கலவரமாக மாற்றியதும், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதும் பெரும் பதற்றத்தை மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து, இன்று காலை முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தமானது நாளை காலை 6 மணி வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளிய நோயாளி சிகிச்சை பிரிவை புறக்கணித்து ஒருமணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
மதுரை போராட்டத்தில் கோரிக்கை
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் செய்து கொலை நடந்ததை கண்டித்தும் அதில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேசிய மருத்துவர் மட்டும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் தங்கும் இடம் போதிய வசதிகளும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இதோடு சேர்ந்து பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு தங்குமிடங்கள் பெரும்பாலும் நல்ல நிலையில் இல்லை, பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது. எனவே தமிழக அரசிடம் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மேலும் பயிற்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளில் உரிய டூட்டி தங்கும் இடம் வழங்க வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்.,
கருப்பு பேஜ் அணிந்து எதிர்ப்பு
தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் மறுநாள் 8:30 மணி வரைஒருமணி நேரம் வெளி நோயாளிகள் பிரிவில் பணி புறக்கணிப்பு செய்யதும், அவசரகால பணி சேவை மட்டும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டு கருப்பு பேஜ் அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தால் சில நோயாதிகள் அவதிக்குள்ளாகினர். ஆனால் பெரும்பாலானோர் வழக்கம் போல மருத்துவமனையும் மருத்துவர்களும் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் கொல்கத்தா பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - A.R.Rahman : அதிக முறை தேசிய விருதை வென்ற இசை புயல்... ஏ.ஆர். ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துக்கள்...