மேலும் அறிய
Advertisement
A.R.Rahman : அதிக முறை தேசிய விருதை வென்ற இசை புயல்... ஏ.ஆர். ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துக்கள்...
A.R.Rahman : இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார். இது அவர் 7வது முறையாக வென்றுள்ள தேசிய விருதாகும்.
இசை மூலம் ரசிகர்களை நேரடியாக கொள்ளை கொண்ட இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் புகழ் இந்த உலகறியும். சர்வதேச அளவில் பிரபலமானவராக கோடான கோடி ரசிகர்களை தன் இசை மூலம் கவர்ந்தவர். பல விருதுகளை குவித்துள்ள அவரின் விருதுகளின் பட்டியலில் மேலும் ஒரு தேசிய விருதை சேர்த்துள்ளார்.
70வது தேசிய விருதுக்கான பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் வென்றுள்ளார். சிறந்த இசைமைப்பாளருக்காக அவர் பெற்றுள்ள 7 வது தேசிய விருதாகும்.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான 'ரோஜா' படத்திற்காக முதல் முறையாக தேசிய விருதை பெற்றார். அதை தொடர்ந்து மின்சார கனவு,கன்னத்தில் முத்தமிட்டால், லகான், மாம், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களுக்காக ஏற்கனவே ஆறு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக அவர் தேசிய விருதை வென்றுள்ளது ஏழாவது முறையாகும். இதன் மூலம் அதிக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை பெறுகிறார்.
அடுத்த இடத்தில் ஐந்து தேசிய விருதுகளை இதுவரையில் வென்றுள்ளார் இசைஞானி இளையராஜா. சிந்து பைரவி, ருத்ரவீணா, தாரை தப்பட்டை உள்ளிட்ட 5 படங்களுக்கு தேசிய விருதை வென்றுள்ளார். அடுத்த இடத்தில் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளரான விஷால் பரத்வாஜ் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை நான்கு முறையும், இந்தி திரையுலகின் மற்றுமொரு பிரபலமான இசையமைப்பாளரான ஜெய்தேவ் மூன்று முறையும் தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
எனவே அதிக முறை சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள் அனைத்து திசையில் இருந்தும் குவிந்து வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion