நாய் கடித்த கறியை மீண்டும் கழுவி விற்பனை செய்த கடைக்காரர்; சிசிடிவி காட்சியால் சர்ச்சை
நாய் கவ்விக்கொண்டு சென்ற கறியை மீண்டும் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக கறிக்கடைக்கு கொண்டு வந்த உரிமையாளர் மீது நடவடிக்கை பாயுமா.?
மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோயில் அருகே கறிக்கடை இயங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கறிக்கடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதை நாயிடம் இருந்து பறித்து கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் பரபரப்பு சி.சி.டி.வி., கட்சிகள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இயங்கும் தள்ளுவண்டி கறிக்கடை
மதுரை மாநகர் பழங்காநத்தம் பகுதியில் மாயன் என்ற கறிக்கடை இயங்கி வருகிறது. பழங்காநத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோயில் முன்பு தள்ளு வண்டியில் ஆட்டுக் கறிக்கடை அமைக்கப்பட்டு, கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு எலும்பு கறியாக 500 ரூபாயும் தனிக்கறியாக 600 ரூபாய்க்கு கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆட்டுக்கறி கடை இயங்கியது. அப்போது மதியம் ஒரு மணி அளவில் கறிக்கடையில் ஆடுகள் கறிக்கு வெட்டப்பட்டு தள்ளுவண்டிக்கு கீழே கறி கழுவுவதற்காக வைக்கப்பட்ட தண்ணீரில் ஆட்டில் குடல் போட்டு வைத்திருந்தனர்.
நாயிடம் குடலை பிடுங்கிய கடைக்காரர்
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் கறிக்கடையை சுற்றி வலம் வந்துள்ளது. ஆனால் அதை விரட்டாமலும், கண்டு கொள்ளாமல் உரிமையாளர் கறி வெட்டிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அங்கிருந்த நாய் ஒன்று ஆட்டின் குடலை கவ்வி கொண்டு சென்றது. நாய் கொண்டு சென்றதைப் பார்த்த உரிமையாளர் நாயை விரட்டி நாயிடமிருந்து கறியை பறித்து வந்து மீண்டும் கறிக்கடையில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
மாநகராட்சி நடவடிக்கை என்ன?
சம்பவத்தினுடைய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற சுகாதாரமற்ற இயங்கக்கூடிய கடைகள் மீது என்ன? நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது. நாய் கவ்விக்கொண்டு சென்ற கறியை மீண்டும் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக கறிக்கடைக்கு கொண்டு வந்த உரிமையாளர் மீது நடவடிக்கை பாயுமா.? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!