(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரையில் சோகம்..பெற்றோர் இரவில் போதை; வீதிக்கு வந்த 9 வயது சிறுமி, ஆறுதல் அளித்த கலெக்டர்
பெற்றோர் மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்ட சோகம் ; சிறுமிக்கு கலெக்டர் போனில் ஆறுதல்.
மதுரையில் பெற்றோர் மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே விரட்டி விடுவதாக ஒன்பது வயது சிறுமி அவனியாபுரம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் களஞ்சியம் பாண்டியம்மாள். இவர்களது ஒன்பது வயது குழந்தை பூமிகா 4-ம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் இரண்டு பேரும் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் வெளியே துரத்தி விட்டு விடுவதாகவும் பல நேரங்களில் தெருவிலேயும், தோழி வீட்டிலும் தங்கி வருவதாகவும்,
நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்ட போது வெளியே தங்கி இருந்ததாகவும் 9 வயது சிறுமி அவனியாபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அந்த குழந்தையை மீட்டு உணவு, உடை, கல்வி அளிக்குமாறு வக்கீல் முத்துக்குமார் என்பவர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாவட்ட சமூக நலத் துறைக்கு உத்திரவிட்டார்.
அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா ஆகியோர் பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். கலெக்டர் சங்கீதா அந்த குழந்தையிடம் போனில் பேசி ஆறுதல் கூறினார். மேலும் இது குறித்து குழந்தைகள் நல குழு விசாரித்து வருகிறார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ''அமைச்சருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தான் திராவிட மாடல்"- அண்ணாமலை சாடல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்