மதுரையில் பிறந்தநாள் விழாவில் மஞ்சள் பை விழிப்புணர்வு கேக் வெட்டி அசத்தல்
மதுரையில் பிறந்தநாள் விழாவின் போது மஞ்சள் பை விழிப்புணர்வு கேக் வெட்டி மகிழ்ந்த ஹோட்டல் உரிமையாளர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தில் விழிப்பனர்வு ஏற்படுத்தும் நோக்கில், மதுரையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் எங்களது K.சுப்பு ஹோட்டல் நிறுவனம் மூலம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் விழிப்புணர்வு உருவாக்கி வருகிறோம்.
நவநீதன் கூறுகையில், “எங்கள் தாத்தா கே.சுப்புவால் மதுரா கோட்ஸ் அருகே அழகரடியில் சிறிய இட்லி கடையாகத் தொடங்கப்பட்ட எங்கள் ஹோட்டல். இப்போது மதுரையில் நான்கு கிளைகளைக் கொண்டுள்ளது. மஞ்சப்பை (மஞ்சள் துணிப் பைகள்) பயன்பாட்டைப் புதுப்பிக்க தொடங்கப்பட்ட இந்த திட்டம் பலரால் வரவேற்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், மேலும் அதை விழிப்புணர்வு செய்வதில் நாங்கள் எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய விரும்புகிறோம். முதலில் அழகரடியில் உள்ள எங்கள் கிளையில் 15 நாட்களுக்கு இலவச துணிப் பைகளை வழங்க முடிவு செய்திருந்தோம். அதமட்டுமல்லால் விழிப்பணர்வுக்காக நிறைய புதுமையான விஷயங்களை செய்தோம்.
குறிப்பாக நாங்கள் வழங்கிய மஞ்சள் நிற ஸ்கூல் பேக், மஞ்சப் பை வடிவில் உயரமான விளம்பர பதாகை, நிறைய விழிப்பணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்ட எங்கள் கனரக வாகனங்கள். இது போல் பல. அப்போதுதான் மஞ்சப்பை வடிவில் பரோட்டா செய்ய வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணம் எங்களுக்கு வந்தது. நாங்கள் நகைச்சுவையாக சிரித்துக் கொண்ட இந்த யோசனைக்கு இவ்வளவு பெரிய பதில் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதன் வெற்றியாக 2023-ம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதினை தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடத்தை வென்றோம். மேலும் எங்கள் மகள் பிறந்தநாளில் விழிப்புணர்வ ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை வடிவில் கேக் தயாரித்து கொண்டாடி மகிழ்ந்தோம் மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப் பை வழங்கினோம்.
துணிப் பைகளை தானாக முன்வந்து கேட்கும் பொதுமக்களின் நம்பமுடியாத பதிலுடன், இப்போது எங்களிடம் அதிக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் உணர்கிறோம். எங்கள் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.