முதல்வர் அரசியலுக்கு அப்பாற்பட்டு என் மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார் - பழ.நெடுமாறன் நெகிழ்ச்சி
கடலூர் சிறையில் ஒரே பிளாக்கில் நானும் ஸ்டாலினும் 15 நாட்கள் இருந்தோம், அப்போது மு.க.ஸ்டாலினுடன் நெருங்கி உறவாடி இருக்கிறேன் - பழ.நெடுமாறன்.
மதுரையில் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்டங்களில் என் மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார் என பழ.நெடுமாறன் நெகிழ்ச்சி பேட்டி.
'இந்த சூழலில் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் என்னை நேரில் சந்தித்தது ஆறுதல் கூறியது என்றும் மறக்க முடியாதவை, மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என கூறினார்.
உலக தமிழர் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மதுரை - புதுநத்தம் சாலை, பேங்க் காலனி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார், வீட்டில் ஒய்வில் இருக்கும் பழ.நெடுமாறனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
மதுரையில் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
— arunchinna (@arunreporter92) October 30, 2023
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மதுரை இல்லத்தில் ஓய்வில் இருக்கும் நெடுமாறனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து விசாரித்தார். pic.twitter.com/RrO9qoIaFh
பின்னர் பழ.நெடுமாறன் அளித்த பேட்டியில் "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான பணி சுமைகளின் இடையே உடல் நலம் குன்றி இருக்கும் என்னை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தது என் உள்ளத்தில் நெழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது, 2002 ஆம் ஆண்டு நான் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் இருந்த போது வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் அதே சிறையில் அடைக்கப்பட்டார், கடலூர் சிறையில் ஒரே பிளாக்கில் நானும் ஸ்டாலினும் 15 நாட்கள் இருந்தோம், அப்போது மு.க.ஸ்டாலினுடன் நெருங்கி உறவாடி இருக்கிறேன், மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்டங்களில் என் மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார், இந்த சூழலில் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் என்னை நேரில் சந்தித்தது ஆறுதல் கூறியது என்றும் மறக்க முடியாதவை, மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு