Siragadikka Aasai: மீனாவை செல்லம் என கொஞ்சும் விஜயா.. ஷாக் ஆன முத்து.. உலக நடிப்புடா சாமி
சிறகடிக்க ஆசைய சீரியலில் விஜயா செயலால் மீனா ஆச்சர்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பின்னர் அண்ணாமலை வீட்டில் பல திருப்பமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. விஜயா நடத்தி வரும் நடனப்பள்ளியில் ஒரு காதல் ஜோடி தவறு செய்துவிடுகின்றனர். இதனால் அப்பெண் கர்ப்பம் ஆகிறார். இந்த விசயம் அப்பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வர, பின்னர் அண்ணாமலை வீட்டிற்கு வ்ந்து விஜயாவை மிரட்ட முத்து-மீனா துணையாக இருந்து பிரச்னையை முடித்து வைக்கின்றனர்.
எப்போதும் அவசரப்பட்டு முடிவெடுக்கும் ஓடுகாளி மனோஜ், தீபன் - ரதி வீட்டாருக்கு பணத்தாசையை காட்டுகிறார். ஆனால், அவர்கள் திடீரென ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர். உடனே விஜயா பயந்து போய் ரோஹினி தான் பணத்தை தர வேண்டும் என கூறுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ரோஹினி ரவுடி சிட்டியிடம் உதவி கேட்குகிறார். இதனால் அண்ணாமலை குடும்பத்திற்குள் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. சிட்டி செய்த தவறால் ரோஹினியை போலீசார் கைது செய்கின்றனர். வழக்கம் போல் இந்த பிரச்னையில் ரோஹினியை முத்துவும் மீனாவும் மீட்டு வீட்டிற்கு கூட்டி வருகிறார்கள்.
இந்த பிரச்னை ஒரு பக்கம் முடிந்தாலும் ரோஹினிக்கு அடுத்து ஒரு தலைவலி ஆரம்பித்திருக்கிறது. ரோஹினியின் மகன் அண்ணாமலை வீட்டிற்குள் வந்து அம்மா எனக் கூற வந்து ஆண்டி என அழைக்கிறான். இதை அனைவரும் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர். முத்துவிற்கு ரோஹினி மீது சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சூழலில் விஜயாவை அண்ணாமலை கண்டிக்கிறார். அப்பவே முத்துவும் மீனாவும் சொன்னாங்க நீ கேட்டியா? பாரு இது எங்கே வந்து கொண்டாந்து விட்டிருக்கிறது என கடிந்துகொள்கிறார்.
நீ நடத்தும் நடனப்பள்ளியால் தான் இந்த பிரச்னை வந்துள்ளது. இனிமேல் நடனப்பள்ளி நடத்த வேண்டாம் என விஜயாவிற்கு அண்ணாமலை ஆர்டர் போடுகிறார். அப்போது நம்ம குடும்பத்தை கெளரவப்படுத்த நினைத்தால் ஏதாவது செய் என அண்ணாமலை கூற விஜயாவுக்கு யோசனை வந்திருக்கிறது. திடீரென மனம் மாறிய விஜயா மீனாவுக்கு சேலை எல்லாம் வாங்கி கொடுத்து அவரை செல்லம் மீனா என்று அழைத்ததும் அண்ணாமலை குடும்பத்தினர் ஷாக் ஆகியுள்ளனர். எப்போதும் மீனாவை கடிந்து கொள்ளும் விஜயாவா இது என ஆச்சர்யமும் இருந்தாலும் நம்ப முடியலையே என்பது போலத்தான் முத்துவின் ரியாக்ஷன் இருக்கிறது. இதில் விஜயா என்ன பொடி வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















