மேலும் அறிய
Advertisement
’வட இந்தியர்களை தெற்கு ரயில்வேயில் பணியமர்த்தும் முயற்சி முறியடிப்பு’- மதுரை எம்.பி. ட்வீட்
மேலும் ”தெற்கு ரயில்வே பொது மேலாளரை சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த ஐம்பத்தொரு காலியிடங்களில் நிரப்பிட”. சு.வெங்கடேசன் கோரிக்கை.
”உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டது. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி” சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
தெற்கு ரயில்வேயில் 51 ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தேர்வாணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது. அந்த பட்டியல் 24 .9. 2021 அன்று தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டது. இந்த செயல் எந்த வகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்பட வேண்டும் என்று 25.09.2021 அன்று ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் நான் கடிதம் எழுதினேன். தெற்கு ரயில்வே எனது கோரிக்கையை ஏற்று அந்த கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை 28-09-2021 அன்று திருப்பி அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 30, 2021
பட்டியலை திருப்பி அனுப்பியது தெற்கு ரயில்வே.
விரைந்து நடவடிக்கைக்கு எடுத்தமைக்கு நன்றி. @GMSRailway #Railway #Tamilnadu pic.twitter.com/AXnzH4pLm8
தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கும் எனது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் 51 காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆர்ஆர்பி சென்னை தேர்வானவர்களைத் தேர்வு செய்திட தெற்கு ரயில்வே பொது மேலாளரை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆர்ஆர்பி சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பட்டியல் 2022 வரை பணியமர்த்தலாம் என்றும் இணையதளத்தில் உள்ளது .
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
எனவே தெற்கு ரயில்வே பொது மேலாளரை சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த 51 காலியிடங்களில் நிரப்பிட கோருகிறேன். தேவைப்பட்டால் ரயில்வே அமைச்சரை இதில் தலையிடவும் அதற்கு அனுமதி வழங்கவும் கோருகிறேன்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion