மேலும் அறிய
Advertisement
Sign of God : "சைன் ஆஃப் காட்" குறும்படத்தை தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் !
இந்த குறும்படம் மூலம் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும். முதலமைச்சர் விழித்துக் கொண்டு தமிழகத்தின் ஜீவதார உரிமையை காக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்” - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தற்போது வெளியான சைன் ஆப் காட் குறும்படத்தை தடை செய்ய விழிப்புடன் இருந்து போர்கால நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் முன்னாள் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்..,” கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் என்ற அபத்தமான குறும்படம், இரு மாநில உறவுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது. முல்லை பெரியாறு குறித்து கற்பனைக் கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக உள்ளது குறிப்பாக குளோபல் டிசாஸ்டர், சேவ் கேரளா என்று வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தற்போது வெளியான சைன் ஆப் காட் குறும்படத்தை தடை செய்ய விழிப்புடன் இருந்து போர்கால நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் @Udhayakumar_RB கோரிக்கை. - details @abpnadu#admk | @SRajaJourno @ADMKMadurai pic.twitter.com/tMhpAeGXuH
— arunchinna (@arunreporter92) October 23, 2022
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக முல்லை பெரியாறு இருந்து வருகிறது. முல்லை பெரியாறு பிரச்னையில் பல கட்ட போராட்டங்களை கடந்து தான் ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்று தந்தார். பல கட்ட ஆய்வில் பல வல்லுனர்கள் ஆய்வு செய்ததில், அணை உறுதி தன்மையாக உள்ளது என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் மூன்று முறை முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். தற்போது ரூல்கர்வ் என்பதை புகுத்தி உள்ளனர். இது சட்டமும் அல்ல, அந்த விதியின் அடிப்படையில் பருவமழை காலத்தில் நீரை தேக்காமல் திறந்து விட்டு, நீர் தேக்கும் காலங்களில் பருவமழை இருக்காது ,இந்த ரூல்கர்வ் என்பது விவசாயிகளுக்கு எதிரானதாகும். முல்லை பெரியார் அணை பலகட்ட ஆய்வுக்குப் பிறகு உறுதித் தன்மை உள்ளது என்று விஞ்ஞான சான்றுள்ளது. ஆனால் கேரளா புதிய அணைக்கட்ட பல்வேறு கற்பனை கலந்த வதந்தியை பரப்பு வருகிறது.
குறிப்பாக பிஞ்சு குழந்தைகளில இதயங்களில் நஞ்சை விதைக்கும் வண்ணம் கேரளாவைச் சேர்ந்த ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் குறும்படம் மிகுந்த வேதனையை அளிக்கிறது, இதை கேரளா அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும், இந்த குறும்படம் வன்மத்தோடு எடுக்கப்பட்டது. இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வன்மத்தோடு உள்ள வெளியிட்டுள்ள நபர்களை சட்டப்படி கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தொடர்ந்து இதை தடை செய்ய வேண்டும். தவறான கருத்துக்களை பரப்புவது தேசத்திற்கு விரோதமான செயலாகும், கற்பனை கலந்த இந்த குறும்படத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும். இந்த குறும்படம் மூலம் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும். முதலமைச்சர் விழித்துக் கொண்டு தமிழகத்தின் ஜீவதார உரிமையை காக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion