Watch Video: மரணபயத்தை காட்டிட்ட பரமா... பயணிகளை துரத்திய யானை.. வைரல் வீடியோ..
சுற்றுலா பயணிகளை யானை துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
![Watch Video: மரணபயத்தை காட்டிட்ட பரமா... பயணிகளை துரத்திய யானை.. வைரல் வீடியோ.. Video Of Elephant chasing tourists in Uttarakhand Jim Corbett Reserve goes viral in Social media Watch Video: மரணபயத்தை காட்டிட்ட பரமா... பயணிகளை துரத்திய யானை.. வைரல் வீடியோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/f99695e6aba0156c526bad8ca9a347f1_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமூக வலைதளங்களில் எப்போதும் வனவிலங்குகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானைகள் தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது யானைகள் சில சுற்றுலா பயணிகளை தாக்கும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பிட் வனவிலங்கு பூங்காவில் சுற்றுலா பயணிகள் வேன் ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது அந்த பூங்காவின் சாலையில் யானை ஒன்று வேகமாக அவர்களை தாக்கும் நோக்கில் ஓடி வந்துள்ளது. அந்த சமயத்தில் துரிதமாக செயல்பட்ட வேன் ஓட்டுநர் வண்டியை வேகமாக பின்னால் எடுத்தார்.
View this post on Instagram
எனினும் அந்த யானை சில தூரம் ஓடி வந்தது. அதன்பின்னர் யானை நின்று கொண்டது. அந்த வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அலறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சுற்றுலா பயணிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பிட் வனவிலங்கு பூங்காவில் ஆசியாடிக் யானை, ராயல் பெங்கால் புலி உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக யானைகள் இந்த வனப்பகுதியில் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)