CBSE: சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு! தவறுகள் தவிர்க்க, கடைசி தேதிக்குள் இதைச் செய்யுங்கள்!
CBSE Board Exams 2026: இறுதிச் சமர்ப்பிப்புக்குப் பிறகு பாட மாற்றங்கள், வகை மாற்றங்கள் அல்லது தாமதமான ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2026ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வ் செய்யப்பட்ட தேர்வர் பட்டியலை (LOC) சமர்ப்பிப்பது குறித்து பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
LOC-ல் சேர்க்கப்பட்டமாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்பதால், துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தரவைச் சமர்ப்பிக்குமாறு, சிபிஎஸ்இ அனைத்து இணைப்புப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
புதிய இரு தேர்வு கொள்கை, APAAR ID
முதன்முறையாக, 10ஆம் வகுப்பு LOC புதிய இரண்டு- தேர்வு கொள்கையின் விதிகளைப் பிரதிபலிக்க உள்ளது. பிப்ரவரி 2026 இல் நடைபெறும் முதன்மைத் தேர்வு அனைத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாயமானது, மேலும் LOC இல் ஒவ்வொரு வேட்பாளரும் சேர்க்கப்பட வேண்டும். பள்ளிகள் தரவைச் சமர்ப்பிக்கும் போது மாணவர்களின் APAAR ஐடிகளை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதிகள் மற்றும் கட்டண முறை
இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சாதாரண கட்டணம் செலுத்தும் சாளரம் திறந்திருக்கும். தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 11வரை சமர்ப்பிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும். கட்டணங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
தரவு சரிபார்ப்பு
மே 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள 10ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத் தேர்வை விளக்க, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்சி அமர்வுகளை நடத்த பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு திருத்தங்கள் அனுமதிக்கப்படாது என்பதால், பள்ளிகள் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள், பாடக் குறியீடுகள் மற்றும் வகைகளை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சமர்ப்பிப்புக்குப் பிறகு பாட மாற்றங்கள், வகை மாற்றங்கள் அல்லது தாமதமான ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகள் LOC தரவைப் பதிவேற்றுவதற்கு முன் OASIS மற்றும் HPE போர்ட்டல்களில் தங்கள் பதிவை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.cbse.gov.in/





















