இவனுக்கு சேர் போடாதீங்கனு சொன்னவதான...தொகுப்பாளர் பாவனாவிடம் சூடான யோகி பாபு
நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனாவின் கேள்வியால் கடுப்பான யோகி பாபு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ் ' துவக்க விழா கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிவகார்த்திகேயன் , யோகி பாபு , கார்த்தி , நடிகை ஜெனிலியா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். ரவி மோகன் தயாரிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உருவாக இருக்கும் 10 படங்களின் அப்டேட்கள் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன. இதில் நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருக்கும் படமும் ஒன்றாகும். இந்த நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணனிடம் நடிகர் யோகி பாபு கடுமையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாவனாவிடம் கோபபட்ட யோகி பாபு
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களிடம் பாவனா மைன் வாய்ஸ் கேம் என்கிற விளையாட்டை விளையாடினார். ஒவ்வொருத்தரின் முகத்தைப் பார்த்து அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டவர்கள் கலகலப்பாக பேசினர். யோகி பாபுவிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இந்த விளையாட்டை விளையாடிய போது அவர் கோபமாக பதிலளித்தார். உங்க மைண்ட் வாய்ஸ் என்ன வென்று பாவனா கேட்க " என்னை வைத்து ரவி மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் வெற்றிபெற வேண்டும். அவரது தயாரிப்பு நிறுவனம் பெரிதாக வளர் வேண்டும் என்பதே என் ஆசை' என யோகி பாபு கூறினார். 'இப்படி நல்லவரா நடிச்சா எப்டி ' என பாவனா கேட்க யோகி பாபு கடுப்பானார். ' நான் நல்லதா தான் யோசிச்சேன். நீ யோசிக்கிற மாதிரி நான் யோசிக்கல. நான் பின்னாடி நின்றிருந்தபோது அவன உள்ள விடாதீங்க , சேர் போடாதீங்கனு உன்ன மாதிரி நான் யோசிக்கல. ' என அவர் கடுமையாக பதிலளித்தார். தொடர்ந்து பாவனா 'நீங்க ரொம்ப நல்லவரு தான் ' என நிலைமையை இலகுவாக்க முயற்சிக்க 'அத கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லு கொழா சண்ட போடுற மாதிரி சொல்லாத' என சண்டைக்கு தயாரானார் யோகி பாபு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது






















