புதுச்சேரி B.Ed. சேர்க்கை: 2025-26 கல்வியாண்டு! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? முழு விபரம் இதோ!
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டின் பி.எட்., இரண்டாண்டு பட்டப்படிப்பிற்கு 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2025-26 கல்வியாண்டின் பி.எட்., இரண்டாண்டு பட்டப்படிப்பிற்கு 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
ஆசிரியர்களைத் தொழிலுக்குத் தயார்படுத்துவதற்காக கூட்டுறவு கல்வியியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. கல்வியியல் கல்லூரி, பி.எட். (இளங்கலை கல்வி) தொழில்முறை ஆசிரியர் கல்வித் திட்டத்தை வழக்கமான முழுநேர முறையில் வழங்குகிறது. கூட்டுறவு கல்வியியல் கல்லூரி NCTE (தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்) இலிருந்து முறையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது மற்றும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., சேர அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மேலாண் இயக்குநர் வெங்கடேஷ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2025-26 கல்வியாண்டின் பி.எட்., இரண்டாண்டு பட்டப்படிப்பிற்கு புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த பட்டப் படிப்பு முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இந்த விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்த பின், பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பி.எட்., படிப்பின் சேர்க்கைக்கான கல்வி தகுதிகள், கட்டண விபரம் www.ccepdy.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அனைத்து அலுவலக நாட்களில் கல்லுாரியை நேரில் அணுகியும் தகவல் பெறலாம்.
தகுதியுள்ள பிற மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருந்தால் பிற மாநில மாணவர்கள் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 0413-2331407 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















