மேலும் அறிய

காளிதேவி படம்.. அழகிய மரப்பெட்டி.. கங்கை நதியில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை!

மகாபாரதம் முதல் ரஜினியின் தளபதி வரை குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் விட்ட கதையை நாம் கேட்டிருப்போம். இன்று அப்படியான ஒரு கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

மகாபாரதத்தில் குந்தி தேவி, குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார். தளபதியில் ரஜினியே ஆற்றில் மிதந்து வரும் குழந்தையாக இருப்பார். இப்படி மகாபாரதம் முதல் ரஜினியின் தளபதி வரை குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் விட்ட கதையை நாம் கேட்டிருப்போம். இன்று அப்படியான ஒரு கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் காசிப்பூர் பகுதியில் கங்கை நதி கரையோரம் குலுசவுத்ரி என்ற படகோட்டி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தூரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை அருகில் நெருங்கி வந்துள்ளது. உன்னிப்பாக கவனித்த குலுசவுத்ரிக்கு  ஆற்றில் ஒரு  மரப்பெட்டி மிதந்து வருவது தெரிந்துள்ளது. உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி மரப்பெட்டியை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர், உள்ளே திறந்து பார்த்தபோது பெட்டிக்குள் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்துள்ளது. மர வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த மரப்பெட்டியில் காளிதேவியின் புகைப்படத்துடன் சிவப்பு நிற துணியில் சுற்றி இருந்துள்ளது அக்குழந்தை.இந்தக்குழந்தையை தானே வளர்க்கவுள்ளதாக வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார் படகோட்டி.

காளிதேவி படம்.. அழகிய மரப்பெட்டி.. கங்கை நதியில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை!

ஆனால் இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர குழந்தையை மீட்டு காப்பகத்தில் இப்போது ஒப்படைத்துள்ளனர். கங்கையில் மிதந்து வந்த செல்லமகளின் விவரம் முதலமைச்சர் யோகி காதுகளுக்கும் சென்றுள்ளது. இதனை அடுத்து கங்கையில் மிதந்து வந்த குழந்தையை அரசே தத்தெடுக்கும் என்றும், குழந்தைக்கான வளர்ப்பு, கல்வி, வீடு உள்ளிட்ட தேவையை அரசே செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை ஆற்றில் இருந்து மீட்டு வளர்க்க ஆசைப்பட்ட படகோட்டியிடமே குழந்தையை முறைப்படி ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கங்கையில் மிதந்து வந்த குழந்தைக்கு கங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள போலீசார், முறையாக பாதுகாப்பாக ஒரு மரப்பெட்டியை தயார் செய்து குழந்தையை ஆற்றில் மிதக்க வைத்துள்ளனர். மீட்கப்பட்டதுமே குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்தோம். ஆரோக்கியமாக உள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெறுகிறது என்றனர்.

காளிதேவி படம்.. அழகிய மரப்பெட்டி.. கங்கை நதியில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை!

கங்கை நதியில் மரப்பெட்டியில் குழந்தை மிதந்து வந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்ல, இணையத்திலும் வைரலானது. கங்கையில் மிதந்து வந்த கங்காவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பெண் குழந்தையான கங்கா, எதிர்காலத்தில் பெரிய சாதனைகளை செய்ய வேண்டுமென கருத்து பதிவிட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட படகோட்டி குலுசவுத்ரிக்கும் இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். படகோட்டியின் துரித நடவடிக்கை ஒரு பிஞ்சுக்குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது என பதிவிட்டுள்ளனர்.

இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
Embed widget