ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் விதி: உபி அரசு அதிரடி முடிவு
முந்தைய மாநில அரசின் சிறைக் கொள்கையின் படி, ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளும் 60 வயது கைதிகளை மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசால் பரிசீலிக்க முடியும்.
சிறைக் கொள்கைகளில் திருத்தம் செய்து, 60 வயதுக்கு உள்பட்ட ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
புதிய கொள்கையின்படி, கொலை போன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி, 16 ஆண்டுகள் வரை எந்த வித பரோலுமின்றி சிறை தண்டனை அனுபவிக்கும் பட்சத்திலும், பரோல் அளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் பட்சத்திலும் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய பரிசீலனை செய்யலாம்.
மேலும் படிக்க: Pride Month : தன்பாலீர்ப்பாளரான தாத்தாவின் காதலை தேடிப்போன பேரன்.. நெகிழவைக்கும் கதை.. வைரல் பதிவு!
உ.பி., சிறைத்துறை இயக்குனர் ஜெனரல், ஆனந்த் குமார் இது குறித்து கூறுகையில், "இந்த புதிய கொள்கை, ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளும் ஏராளமான குற்றவாளிகளுக்கு பலன் அளிக்கும். மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க உதவும்" என்றார்.
முந்தைய மாநில அரசின் சிறைக் கொள்கையின் படி, ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளும் 60 வயது கைதிகளை மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசால் பரிசீலிக்க முடியும். இதை கடந்த மாதம் அரசு மாற்றியது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தண்டனை பெற்ற கைதிகள் பிரயாக்ராஜ், வாரணாசி, ஃபதேகர், எட்டாவா, பரேலி மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 63 மாவட்ட சிறைகளிலும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ''நான் எம்.எல்.ஏ.பொண்ணு..'' வாக்குவாதம் செய்த பெண்! ரூ.10ஆயிரம் அபராதம் போட்ட அடடே போலீஸ்!
Rajya Sabha Election 2022: ராஜ்யசபா தேர்தலில் மாஸ்காட்டிய பாஜக, காங்கிரஸ்... மாநில வாரியாக வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்