Thug Life First Review : கமல் சிம்பு கெமிஸ்ட்ரி அபாரம்..தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம் இதோ
Thug Life Review : மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

தக் லைஃப் முதல் விமர்சனம்
மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி சென்சார் பிரதியை பார்த்த உமைர் சந்து படத்தின் முதல் விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
" தக் லைஃப் ஒரு கல்ட் கிளாசிக். கமல் மற்றும் சிம்புவின் நடிப்பு அபாரம். கதை மற்றும் சண்டைக் காட்சிகள் படத்தின் பலம். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணி சிறப்பு." என அவர் பதிவிட்டுள்ளார்."
First Review #Thuglife ! It’s a Cult Classic Thriller with terrific performances by #KamalHaasan & #STR. Power Packed Story & Action Stunts. #ARRehman & #ManiRatnam Deadly combo is Back with Bang !! Go for it !
— Umair Sandhu (@UmairSandu) June 2, 2025
3.5⭐️/5⭐️ pic.twitter.com/npI7JVUlNz
தக் லைஃப் படத்தில் கமல் , சிம்பு , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , நாஸர் , சஞ்சனா , அசோக் செல்வன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
விக்ரம் பட வசூலை முறியடிக்குமா தக் லைஃப் ?
கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் கமல் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாயகன் படம் உருவாக்கிய எதிர்பார்ப்பை தக் லைஃப் திரைப்படம் பூர்த்தி செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. மேலும் கமல் நடித்து கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விக்ரம் படத்தின் வசூல் சாதனையை தக் லைஃப் படம் முறியடிக்குமா என்கிற கேள்வியும் உள்ளது. தக் லைஃப் படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் பாசிட்டிவான மனநிலையில் உள்ளார்கள். மேலும் படத்தின் முன்பதிவுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கும் பட்சத்தில் ஃபேமிலி அடியன்ஸை கவர்ந்தால் நிச்சயம் தக் லைஃப் படம் விக்ரம் பட வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.





















