சன் டிவி சீரியல் ஹீரோ காதல் வலையில் விழுந்த விஜய் டிவி சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'மிஸ்டர் மனைவி' தொடரின் நாயகன் பவன் காதலித்து வரும் விஜய் டிவி சீரியல் நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் சமீப காலமாக ஒன்றாக இணைந்து நடிக்காத பிரபலங்கள் கூட, காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஷபானா - ஆரியன், வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஆகியோர் இதற்க்கு சிறந்த உதாரணம்.
இந்த வரிசையில் தற்போது புதிய காதல் ஜோடி இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என்றாலும், நண்பர்கள் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வேறு யாரும் அல்ல... 'மிஸ்டர் மனைவி ' சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமான பவன் ராகவேந்திரா மற்றும் தற்போது சிந்து பைரவி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் ஆகியோர் தான்.
ஆர்த்தி சுபாஷ்:
சென்னையை சேர்ந்த ஆர்த்தி சுபாஷ் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் நடிப்பின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பினார். சென்னை மீம்ஸ் என்கிற யூடியூப் சேனலில் சம்சாரம் அது மின்சாரம் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். இதை தொடர்ந்து சீரியலிலும் வாய்ப்பு தேட துவங்கினார். அந்த சமயத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டவர் இல்லம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் நடித்த மல்லிகா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து, அதிரடியாக விஜய் டிவிக்கு தாவிய ஆர்த்தி, வீட்டுக்கு வீடு வாசல்படி என்கிற தொடரில் நடித்தார். இந்த தொடரில் அழகு வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார். மேலும் தற்போது சிந்து பைரவி என்கிற தொடரில் நடித்து வருகிறார்.
பவனுடன் காதல்:
'சிந்து பைரவி' தொடரில் பைரவியக ஆர்த்தி நடித்து வருகிறார். அக்கா தங்கைகள் இருவரும் விருப்பமே இல்லாத அண்ணன் - தம்பிகளை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்வார்களா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். தற்போது பரபரப்பாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தான், சன் டிவி 'மிஸ்டர் மனைவி ' சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த பவனை காதலிக்கும் விஷயத்தை ஆர்த்தி சுபாஷ் அறிவித்துள்ளார்.
விரைவில் திருமணம்?
பிரபலங்கள் தங்களின் காதலை அறிவித்த சில மாதங்களில் திருமண தகவலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில்... கூடிய விரைவில், ஆர்த்தி சுபாஷ் மற்றும் பவன் திருமணம் நடைபெற உள்ளதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நட்சத்திர ஜோடி:
நட்சத்திர ஜோடியான ஆர்த்தி - பவன் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.





















