மாமியாரிடம் பொய் சொல்லி பொண்டாட்டியை அழைத்துச் சென்ற புருஷன் - எல்லாம் அதுக்காக?
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஹாஸ்பிடலுக்கு சென்று இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதியை காப்பாற்றிய மயில்வாகனம்:
அதாவது மண்டபத்தில் வைத்து கலச பூஜை நடந்து முடிகிறது. இதைத்தொடர்ந்து சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வர சந்திரகலா திட்டம் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தம் அடைகிறாள்.
அதன் பிறகு கார்த்திக்கை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என யோசிக்கின்றனர். பிறகு ரேவதியின் பிளைட் டிக்கெட் கீழே விழ சந்திரகலா சாமுண்டீஸ்வரி அதை பார்க்க போகும் சமயத்தில், மயில்வாகனம் அந்த டிக்கெட்டை எடுத்து ரேவதியை காப்பாற்றுகிறான்.
பொய் சொன்ன கார்த்திக்:
பிறகு கார்த்தியிடம் ரேவதி ஆஸ்திரேலியா செல்கிறாளா? என்று விசாரிக்க அவனும் ஆமாம் என்று சொல்ல மயில்வாகனம் ரேவதியிடம் நீ செய்வது சரியில்ல என்று அறிவுரை வழங்குகிறான். அடுத்த நாள் கார்த்திக் ரேவதி வெளியே கிளம்ப, சாமுண்டீஸ்வரி உங்களுடன் நானும் வருவதாக சொல்ல கார்த்திக் நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன், பெங்களூருக்கு ஒரு கல்யாணத்துக்கு போறாங்க என்று பொய் சொல்லி ரேவதியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான்.
ரேவதி கார்த்தியுடன் ஏர்போர்ட்டுக்கு வரும் சமயத்தில் சந்திரகலா போன் செய்து நீ ஆஸ்திரேலியா போறது எனக்கு தெரியும் இப்போ இருக்க சூழ்நிலையில் இதுதான் சரியான முடிவு என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள். ரேவதி கார்த்தியிடம் காரை நிறுத்த சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















