மேலும் அறிய
மதுரை வலையங்குளத்தில் அதிர்ச்சி! டிரம்ஸ் வாசித்த இளைஞர் கொடூர கொலை, காரணம் என்ன?
இளைஞர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை பெருங்குடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்
Source : Other
மதுரை வலையங்குளம் பகுதியில் மூன்று, இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி.
அஜய் மீது 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதல்
மதுரை வலையங்குளம் பகுதியில் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் அழகர்(எ) அஜய் ( வயது 19) இதே பகுதியில் டிரம்ஸ் (மேளம்) அடிக்கும்வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வளையங்குளம் மெயின் ரோட்டில் புதிய தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நண்பர்களுடன் டிரம்ஸ் வாசித்துள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பும்போது மூன்று பைக்குகளில் வந்த ஒன்பது பேர் கொண்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் மோதியதில் கீழே விழுந்த அஜய் மீது 10 க்கும மேற்பட்ட இளைஞர்கள் தாக்கினர்.
போதைப் பழக்கம் தான் முக்கிய காரணம்
இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அழகர் (எ) அஜய் பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து வலையாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரும் விசாரணை செய்து வருகின்றர். மேலும் தப்பி ஓடிய இளைஞர்களையும் போலீசார் தேடி வந்தனர். டிரம்ஸ் வாசிப்பதில் ஏற்பட் ட தகராறில் வாலிபர் அஜய் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூர மரணத்திற்கு இளைஞர்கள் இடையே உள்ள போதைப் பழக்கம் தான் முக்கிய காரணம் என பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்.
கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை பெருங்குடி போலீஸார் கைது செய்தனர். இதில் கார்திக்,
பாண்டி முருகன், இந்திரஜித், இவர்கள் மூவரும் சகோதரர்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குசவன் குண்டு பகுதிக்கு சென்ற அஜயை, கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து நேற்று காலை மலையன்குளம் பகுதிக்கு வந்த கார்த்திகை, அஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, வலையங்குளம் பகுதியில் அஜயை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் கார்திக்கின் நண்பர்கள் முத்துப்பாண்டி, ஹரிராகவன், பிரவின்குமார், விஷ்னு ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் தலைமறைவாக உள்ள பாண்டி என்ற இளைஞரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















