Headlines Today, 11 Sep: : மூடப்படும் சென்னை ஃபோர்டு.. பாரதி நினைவு நூற்றாண்டு அறிவிப்புகள்.. சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கிய செய்திகள் சில...
![Headlines Today, 11 Sep: : மூடப்படும் சென்னை ஃபோர்டு.. பாரதி நினைவு நூற்றாண்டு அறிவிப்புகள்.. சில முக்கியச் செய்திகள்! Tamil Nadu News Headlines Tamil Nadu Mahakavi Day 9/11 americal War Covid Headlines News in tamil Headlines Today, 11 Sep: : மூடப்படும் சென்னை ஃபோர்டு.. பாரதி நினைவு நூற்றாண்டு அறிவிப்புகள்.. சில முக்கியச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/823a14b23c044b27a0ab4c31353769eb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.நாட்டிலுள்ள ஒரு சில பகுதிகளில், மாவட்டங்களில், அதிக அளவில் பாதிப்புகள் இருப்பது குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. மேலும், உருமாறும் வைரசை கண்காணிக்க நிலையான மரபணு வரிசைப்படுத்தலின் அவசியம் குறித்து பிரதமர் பேசினார்
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் 16,500 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில் ‘பாரதியியல்’ தனிப்பிரிவு; பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கை என 14 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டுவரும் ஃபோர்ட் கார் தொழிற்சாலை மூடப்படுவதை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து இடையே ஓல்ட் டிராப்ஃபோர்ட் மைதானத்தில் நடைப்பெறுவதாக இருந்த 5வது டெஸ்ட் போட்டி, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளில் பிஜேபி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பபானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தனது முதல்வர் பதவியை தக்கவைப்பதற்காக மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். அவருக்கு போட்டியாக அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. பிரியங்கா திபெர்வால் என்ற பெண்ணை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடா்பாக, தமிழறிஞா்கள், ஆன்மிக ஆா்வலா்களைக் கொண்ட குழுவை அமைக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கோவிட் தடுப்பு மருந்தை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள், தங்கள் நாட்டிற்கு வருகை தர அனுமதிக்கப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்துள்ளது.
மேலும், வாசிக்க:
யோக்கியன்னு நெனச்சா... இவ்வளவு பெரிய டூபாக்கூரா நீ... இங்கி., போர்டின் தில்லாலங்கடி அம்பலம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)