News Today LIVE : விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ.சி., பதில்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Background
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ.சி., பதில்
தனது பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்த தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த எஸ்.ஏ.சி., விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாகவும், அது தற்போது செயல்படவில்லை என்றும் கடந்த பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் அது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் எஸ்.ஏ.சி., தரப்பு பதில்
மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி எம்பியானார்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வானார்.
புதுச்சேரியில் செல்வகணபதி
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு
திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு
2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஏற்றுமதி 2 ட்ரில்லியன் டாலர் இலக்கு - நிதியமைச்சர்
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஏற்றுமதி 2 ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

